முயன்று தெரிதல்
முயன்று தெரிதல் (trial and error) அறிவைக் கற்க, சிக்கல் தீர்க்க ஒரு அடிப்படை வழி. அன்றாட வாழ்வியலில் இருந்து உயர் தொழில்நுட்பம் வரை முயன்று தெரிதல் பய்ன்படுகின்றது.
கணித எடுத்துக்காட்டு
தொகுஎடுத்துக்காட்டாக மூன்று தனி பொருட்களை (அ, ஆ, இ) எத்தனை வழிகளில் வரிசைமாற்றம் செய்யலாம் என்பதை முயன்று தெரிதல் வழியாக செய்ய எல்லா வரிசைகளையும் எழுதிப் பாக்கலாம். அவை பின்வருமாறு அமைகின்றன:
- அ, ஆ, இ
- அ, இ, ஆ
- ஆ, அ, இ
- ஆ, இ, அ
- இ, அ, ஆ
- இ, ஆ, அ
மொத்தம் 6 என எண்ணி சொல்ல முடியும்.
ஒரு சுருக்க வழி மூன்று தனி பொருட்களை எத்தனை வரிசைமாற்றம் செய்யும் என்பதைக் கணிக்கும் சூத்திரத்தை அறிந்திர்ப்பதாகும். அதாவது n பொருட்கள் n! வழிகளில் வரிசைப்படுத்த முடியும். எனவே 3 பொருட்களை 3! = 6 வழிகள் என்பதாகும்.