முயலகன்
முயலகன் எனும் உருவம் தட்சிணாமூர்த்தி மற்றும் நடராசர் போன்ற சிவத் தோற்றங்களில், சிவபெருமானின் காலடியில் அமைந்திருக்கும். முயலகனை அறியாமை மற்றும் ஆணவத்தைக் குறிப்பதால், அறிவுப் பிழம்பாகிய சிவபெருமான், அறியாமை மற்றும் ஆணவத்தின் வடிவமான முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பாகும். [1]

தட்சிணாமூர்த்தி காலடியில் முயலகன்
முயலக நோய்தொகு
முயலகன் என்பது ஒரு வித வலிப்பு நோய் ஆகும். [2] முயலக நோய் கொல்லி மழவனின் மகளுக்குக் கண்டிருந்தது என்றும், அந்நோயை திருஞானசம்பந்தர் திருப்பதிகம் ஓதி அருளிய அளவில் முயலகன் எனும் வலிப்பு நோய் தீர்ந்தது என திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருப்பாச்சிலாச்சிராம தேவாரத் திருப்பதிகத்தின் நாற்பதாவது திருமுறை வாயிலாக அறிய இயலுகிறது. [3]
மேற்கோள்கள்தொகு
- ↑ தட்சிணாமூர்த்தி
- ↑ EUdict :: Tamil-English dictionary[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "திருமுறை 44வது திருப்பதிகம் - முயலகன் தீர்த்தது". 2016-04-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-04-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)