முல்லர் இளவுயிரி

முல்லர் இளவுயிரி (Müller's larva) அல்லது முல்லேரியா என்பது சில பாலிகிளாடிடாவின் இளவுயிரி ஆகும்.[1] இது 8-மடங்கு சமச்சீர் தன்மையைக் கொண்டுள்ளது. இது சீப்பு இழுது போன்றது.[2] முல்லரின் இளவுயிரி குற்றிலையுடன் கூடிய பல இணை மற்றும் இணையில்லா தனித்த மடல்களைக் கொண்டுள்ளது. உடலின் மற்ற பகுதிகளில் உள்ள குற்றிலைகளை விட மடல்களில் உள்ள குற்றிலை நீளமானது. இளவுயிரியின் முன் மற்றும் பின் முனைகளில் நீண்ட குற்றிலை (உச்சி மற்றும் வால்) தொகுப்புகள் உள்ளன. உச்சி தொகுப்பு மத்திய நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய ஒரு உணர்திறன் அமைப்பான நுனி உறுப்பிலிருந்து உருவாகிறது.[2]

முல்லர் இளவுயிரி

மிதவைவாழி வலையைக் கண்டுபிடித்த செருமானிய உடலியல் நிபுணர் ஜோகான்னசு பீட்டர் முல்லரின் (1801-1858) பெயரால் இது பெயரிடப்பட்டது. மேலும் பல விலங்கின தொகுதியின் இளம் உயிரிகளை முல்லர் முதலில் விவரித்துள்ளார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Lanfranchi, Alberto; Bedini, Celina; Ferrero, Enrico (1981), "The ultrastructure of the eyes in larval and adult polyclads (Turbellaria)", The Biology of the Turbellaria (in ஆங்கிலம்), Springer Netherlands, pp. 267–275, doi:10.1007/978-94-009-8668-8_35, ISBN 9789400986701
  2. 2.0 2.1 Rawlinson, Kate A (2010). "Embryonic and post-embryonic development of the polyclad flatworm Maritigrella crozieri; implications for the evolution of spiralian life history traits". Frontiers in Zoology 7 (1): 12. doi:10.1186/1742-9994-7-12. பப்மெட்:20426837. 
  3. Smith, N. F.; Johnson, K. B.; Young, C. M. (2002). "Phylum Platyhelminthes". Atlas of Marine Invertebrate Larvae. London: Academic Press. பக். 123–152. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லர்_இளவுயிரி&oldid=3816644" இலிருந்து மீள்விக்கப்பட்டது