முளிமரம்

உலர்ந்த மரம்

முளிமரம் என்பது உலர்ந்த மரம்.

முளிமரம்

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலைநிலமாக மாறும் காலத்தில் மரங்கள் காய்ந்துபோகும். இதனை முளிமரம் எனச் சங்கப்பாடல் குறிப்பிடுகிறது. முளிமரத்தின் சுள்ளிகளை அடுப்பு எரிக்கப் பயன்படுத்துவர். பெரிய கட்டைகளை எரித்து இரவில் முற்றத்தில் வெளிச்சம் உண்டாக்கிக்கொண்டது பற்றிச் சங்கப்படல் குறிப்பிடுகிறது. [1]

அடிக்குறிப்பு

தொகு
  1. யானை தந்த முளிமர விறகின்
    கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
    மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
    மந்தி சீக்கும் அணங்குடை முன்றில் - புறநானூறு 247
"https://ta.wikipedia.org/w/index.php?title=முளிமரம்&oldid=984968" இலிருந்து மீள்விக்கப்பட்டது