முள்முடி சூட்டப்படுதல்

முள்முடி சூட்டப்படுதல் என்பது நற்செய்திகளின்படி முட்களால் பின்னப்பட்ட முடி ஒன்று இயேசுவின் தலையில் சூட்டப்பட்ட நிகழ்வினைக்குறிக்கும். இயேசுவைக்கைது செய்தவர்கள் அவரின் சாவுக்கு முன்பு அவருக்கு அளித்த தண்டனைகளில் இதுவும் ஒன்று. இதனால் இயேசுவை ஏளனம் செய்யவும் அவரை துன்புறுத்தவும் முனைந்தனர். இந்த நிகழ்வு மத்தேயு (27:29), மாற்கு (15:17) மற்றும் யோவான் (19:2, 5) நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது. திருச்சபைத் தந்தையர்களின் எழுத்துகளிலும் இந்த நிகழ்வு அடிக்கடி குறிக்கப்படுகின்றது.[1][2][3]

இயேசுவுக்கு முள்முடி சூட்டப்படுதல், கரவாஜியோ, அண். கி.பி. 1604

மேற்கோள்கள்

தொகு
  1. John 19:2, John 19:5
  2. Walter Richard (1894). The Gospel According to Peter: A Study. Longmans, Green. p. 7. பார்க்கப்பட்ட நாள் 2022-04-02.
  3. Davisson, Darrell D (2004). Kleinhenz, Christopher (ed.). Medieval Italy: An Encyclopedia. Vol. 1. Abingdon, England: Routledge. p. 955. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415939294.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்முடி_சூட்டப்படுதல்&oldid=4102280" இலிருந்து மீள்விக்கப்பட்டது