முழுப்பேச்சின்மை


பெருமூளை அரைக் கோளத்தில் நைவுகளால் பேச்சுமையம் பாதிக்கப்பட்டு முழுப்பேச்சின்மை உண்டாகிறது. இட உட்புறக் கழுத்துத் தமனி அல்லது மையப் பெருமூளைத்தமனியின் அடைப்பால் முழுப்பேச்சின்மை உண்டாகிறது. புற்றுநோய்க் கட்டிகளும் இந்நோய் நிலையை உண்டாக்கலாம். மையப் பெருமூளைத்தமனி இந்தப் பகுதிகளுக்கும் குருதிப் பரிமாற்றம் செய்வதால் அந்த தமனியோ பேச்சின்மை உண்டாகிறது. இந்நிலையின்போது ஒருசில சொற்களே பேச முடியும். படிக்கவோ எழுதவோ இயலாது. மற்றவர்கள் பேசும் ஒரு சில எளிய சொற்களைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக இந்நிலையில் உள்ளவர்கள் சீரடையவே முடியாது. மூளையின் ஓர் அரைக்கோளம் பாதிக்கப்பட்டால், மற்ற அரைக்கோளம் பாதிக்கப்பட்ட பணியைச் சரிசெய்ய முடியும் என்பது தவறான கருத்தாகும். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. அ. கதிரேசன் (2007). அறிவியல் களஞ்சியம், தொகுதி பதினேழு. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். p. 662.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முழுப்பேச்சின்மை&oldid=3602500" இலிருந்து மீள்விக்கப்பட்டது