முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்
முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் ("Muslim ibn al-Hajjaj" அரபு மொழி: مسلم بن الحجاج) பொதுவாக 'இமாம் முஸ்லீம்' என அழைக்கப்படுகிறார். இவர் ஒரு இரானிய பாரசீக இஸ்லாமிய அறிஞர் ஆவார். இவர் குறிப்பாக ஒரு முஹதீத் (ஹதீஸ் கலை அறிஞர்) என்று அழைக்கப்படுகிறார்.[1] ஹதீஸ்களின் ஆறு முக்கிய தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இவர் தொகுத்த ஸஹீஹ் முஸ்லிம் 'இரண்டாவது மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாகக்' கருதப்படுகிறது.[2]
பிறப்பு
தொகுமுஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் இசுலாமிய நாட்காட்டி (ஹிஜ்ரி) 204இல் (கி.பி. 817இல்) ஒரு பாரசீகக் குடும்பத்தில், (இன்றைய இரான் நாட்டில்) உள்ள நிசாப்பூரில் பிறந்தார். [3][4] எனினும் வரலாற்றாசிரியர்கள் இடையே அவருடைய பிறந்த தேதி குறித்து கருத்துவேறுபாடுகள் உள்ளன.
ஹதீஸ் தொகுப்பு
தொகுஹதீஸ்களைச் சேகரிக்க முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் தற்போதைய ஈராக், சிரியா மற்றும் எகிப்து உட்பட அரேபிய தீபகற்பத்தில் உள்ள பல பகுதிகளுக்கு பல முறை பயணம் செய்தார். அவர் தனது சேகரிப்பில் மொத்தமிருந்த 3,00,000 ஹதீஸ்களில் 'ஸஹீஹ் முஸ்லீம்' நூலில் சேர்ப்பதற்காக, கடுமையான வரையறை அளவுகோல்களின் அடிப்படையில் ஆய்ந்து பிரித்து தேர்வு செய்து தனது சேகரிப்பில் சுமார் 4,000 ஹதீஸ்களை மட்டுமே சேர்த்தார்.[5]. இந்த ஹதீஸ் தொகுப்பு பணியில் அவருடைய மாணவர்களான இமாம் திர்மிதி, இபின் அபி ஹத்தீம் அல்-ராஸி மற்றும் இப்னு குஜைமா ஆகியோரும் ஈடுபட்டனர்.
இறப்பு
தொகுமுஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் 55ஆம் வயதில் தன்னுடைய பிறந்த நகரான நிசாப்பூரிலேயே 25ஆம் தேதி ரஜப் மாதம் இசுலாமிய நாட்காட்டி (ஹிஜ்ரி) 261இல் (கி.பி. 874இல்) இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Abdul Mawjood, Salahuddin `Ali (2007). The Biography of Imam Muslim bin al-Hajjaj. translated by Abu Bakr Ibn Nasir. Riyadh: Darussalam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9960988198.
- ↑ Various Issues About Hadiths
- ↑ Siddiqui, Abdul Hamid. "Imam Muslim". Archived from the original on 31 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 October 2012.
- ↑ Ahmad, K. J. (1987). Hundred Great Muslims. Des Plaines, Ill.: Library of Islam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0933511167. Ali, Syed Bashir (May 2003). Scholars of Hadith. The Makers of Islamic Civilization Series. Malaysia: IQRAʼ International Educational Foundation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1563162040. Ahmad ibn Muhammad ibn Khallikan (1868) [Corrected reprint]. Ibn Khallikan's Biographical Dictionary. Vol. III. translated by Baron Mac Guckin de Slane. Paris: Oriental translation fund of Great Britain and Ireland. p. 349.
- ↑ Sahih Muslim 1/4 English Arabic (Hadith Collections) " Imam Muslim Bin Hajaj Bin Naysaburi". Dar Al kotob & Jarir Bookstore. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782745144249.