மு. சிவலிங்கம் (இலங்கை எழுத்தாளர்)
மு. சிவலிங்கம் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் அரசியல்வாதியும் ஆவார். பல சிறுகதைகளை எழுதியுள்ளார். கலாபூஷணம் பட்டம் பெற்றவர்.[1] இவர் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளரும், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமாவார். வீரகேசரி பத்திரிகையின் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். தொழிற்சங்க பத்திரிக்கையின் பொறுப்பாசிரியராக இருந்தவர். அரசபாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றியவர்.
மு.சிவலிங்கம் | |
---|---|
பிறப்பு | முருகன் சிவலிங்கம் ஆகத்து 26, 1950 தலவாக்கொல்லை |
தேசியம் | இலங்கை |
குடியுரிமை | இலங்கை |
வாழ்க்கைத் துணை | சியாமளா குமாரி |
பிள்ளைகள் | 3 |
விருதுகள் | அரச சாகித்திய விருது, கலாபூஷணம் விருது |
வலைத்தளம் | |
www |
அரசியலில்
தொகுமலையக மக்கள் முன்னணி என்ற ஒரு அரசியல் கட்சியை ஸ்தாபித்தவர்களுள் முக்கியமானவர். அக் கட்சியின் செயலாளர் நாயகமாகக் கடமை புரிந்தவர். மத்திய மாகாண சபையின் பிரதி தலைவராகவும் பணி புரிந்தவர். அரசியல் காரணங்களுக்காக இரண்டு முறை சிறை சென்று திரும்பியவர்.
கலையுலகில்
தொகுவிருதுகள்
தொகு- நான்கு முறை அரச சாகித்திய விருதுகள்
- சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது
- தமிழியல் விருது
- கனகசெந்திநாதன் விருது
- கலாபூஷணம் விருது
- கரிகாற்சோழன் விருது
- பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான "சங்கச் சான்றோர் விருது"
எழுதிய நூல்கள்
தொகு- ஒப்பாரி கோச்சி (சிறுகதைத் தொகுப்பு) (2010)
- மலைகளின் மக்கள் (சிறுகதைத் தொகுப்பு) (1992)
- ஒரு விதை நெல் (சிறுகதைத் தொகுப்பு) (2004)
- வெந்து தணிந்தது காலம் (சிறுகதைத் தொகுப்பு) (2013)
- பஞ்சம் பிழைக்க வந்த சீமை (நாவல்) (2015)
- மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் (ஆய்வு நூல்) (2007)
- தேயிலை தேசம் (மொழிப் பெயர்ப்பு ) (2003)
- சிறுவர் பண்ணைகள் (2016)
- உயிர் (நாவல்) (2018)
மேற்கோள்கள்
தொகு- ↑ மு. சிவலிங்கத்தின் ஒப்பாரி கோச்சி நூல் வெளியீடு, தினகரன் வாரமஞ்சரி, நவம்பர் 21, 2010