மு. பாலசுப்பிரமணியன்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மு. பாலசுப்பிரமணியன் புதுவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முனுசாமி - காளியம்மாள் தம்பதியரின் மூத்த மகனாவார். புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றும் இவர் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளருமாவார்.1 புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
இலக்கியத்துறையில்
தொகுபரிதியன்பன் என்னும் புனைபெயரில் எழுதி வருகிறார். நடைவண்டி சிறுவர் கலை இலக்கியக் கழகம் என்ற ஓர் அமைப்பையும் நிறுவி நடத்தி வருகிறார். நாளிதழ்களுக்கும் மாத இதழ்களுக்கும் படைப்புகள் வழங்கும் இவர் மேடைப் பேச்சாளருமாவார்.
படைப்புகள்
தொகு- வாழப்பிறந்தோம் (புதுக்கவிதைத்தொகுப்பு) 2006
- நடைவண்டி (சிறுவர்பாடல்கள்) 2005.
- அரைக்கீரை விற்கிறான் அம்பானி (ஹைக்கூத்தொகுப்பு) 2008.
- வெள்ளைத் திமிர் (கவிதைத்தொகுப்பு) 2010
- சிட்டுக்குருவி (சிறுவர்பாடல்கள்) 2010
- மானாவாரி (கவிதைகள்) 2011
- கொதிக்கும் பூமி (கவிதைகள்) - 2014
- அன்னப் பறவை (சிறுவர்பாடல்கள்) 2014
- பாட்டரங்கில் பாலா (கவியரங்கக் கவிதைகள்) (அச்சில்) 2015
- ஜெயந்தி நாற்பது (அச்சில்) 2015
பெற்ற விருதுகள்
தொகு- சென்னைக் கம்பன் கழகத்தின் தமிழ்நிதி விருது 2014.
- மூவொரு அறக்கட்டளை - சிறந்த புதுக்கவிதை நூலுக்கான விருது.
- தமிழ்க்கலைமன்றம் வழங்கிய, கவிஞர் தமிழ்ஒளி இலக்கிய விருது, 2009.
- மக்கள் கலைக்கழகம் வழங்கிய எழுச்சிக்கவி விருது. 2008.
- புலவர் அரிமதி தென்னகனார் விருது 2007.
- மீறல் இலக்கிய அமைப்பு வழங்கிய, பாரி விருது 2007.
- புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கியப் பரிசு 2006
- புதுச்சேரி அரசின் நேரு குழந்தை இலக்கியப் பரிசு 2006.