மு. யூசுப்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குளச்சல் மு. யூசுப் குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் என்னும் ஊரில் பிறந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழிற்கு பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். தன் ஊரினுடையப் பெயரையும் இணைத்து குளச்சல் மு. யூசுப் என அறியப்படுகிறார்.
மொழிபெயர்ப்புகள்
தொகு1. மீஸான் கற்கள் (நாவல்), 2. மஹ்ஷர் பெருவெளி (நாவல்), 3. ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (தன்வரலாறு), 4. நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி (தன்வரலாறு), 5. நளினி ஜமீலா (தன்வரலாறு), 6. அழியாமுத்திரை (நாவல்), 7. ஒரு அமரகதை (நாவல்), 8. வினயா (தன்வரலாறு), 9. அடூர்கோபால கிருஷ்ணன் (பதிவுகள்), 10. உலகப்புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைத் தொகுப்பு), 11. அஜிதா (தன்வரலாறு), 12. மேலும் சில ரத்தக்குறிப்புகள் (நாவல்), 13. சப்தங்கள் (நாவல்), 14. பர்ஸா (நாவல்), 15. பால்யகாலசகி (நாவல்), 16. உப்பப்பாவுக் கொரு ஆனையிருந்தது (நாவல்), 17. தற்கால மலையாளச்சிறுகதைகள் (தொகுப்பு), 18. ஆமென் (தன்வரலாறு), 19. கொச்சரேத்தி (நாவல்), 20. அக்னிசாட்சி (நாவல்), 21. ஆஸாதி (நாவல்), 22. பாத்துமா வின் ஆடு (நாவல்), 23. உண்மையும் பொய்யும் (கட்டுரைகள்), 24. ஆனைவாரியும் பொன் குருசும் (நாவல்), அச்சில்: 25. தஸ்கரன் மணியன்பிள்ளை (தன் வரலாறு), 26. நபி பெருமகனார், 27. உமறுல் கத்தாப் (வரலாறு), 28. மலையாளத்தில்: நாலடியார்.
விருதுகள்
தொகுதிருவள்ளுவர் திருச்சபையின், தமிழ்த் தொண்டர் விருது, தொ.மு.சி. ரகுநாதன் நினைவுப்பரிசு, ஆனந்தவிகடன் விருது, தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விருது, சமூக – நல அமைதி அறக்கட்டளை விருது, குடியரசுதின விருது, நல்லி – திசையெட்டும் விருது, உள்ளூர் பரமேஸ்வர அய்யர் விருது (கேரளா), இஸ்லாமிய தமிழியல் ஆய்வக விருது, வி.ஆர். கிருஷ்ணய்யர் விருது, ஸ்பாரோ விருது உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார்.