மூக்கரைப்பெருமாள் கோயில்

மூக்கரைப்பெருமாள் கோயில் என்பது சேலம் மாவட்டம் எடப்பாடி, ஜலகண்டாபுரம் சாலையில் பழமையும் சிறப்பும் வாய்ந்த பெருமாள் கோவில் ஆகும். இங்குள்ள பெருமாள் சுயம்பாக உள்ளார். இங்கு 18 அடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. மேலும் ஹயகிரீவர், தன்வந்திரி சன்னதிகளும் உள்ளன. நாமக்கல் ஆஞ்சநேயரைப் போல் மிகவும் சக்தி வாய்ந்தவர். இங்கு மாதந்தோறும் பவுர்ணமியில் சத்தியநாரயண பூஜை மிக சிறப்பாக நடைபெறும். அதேபோல் மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். தமிழ் வருடப்பிறப்பன்றும் மார்கழி மூல நட்சத்திரத்தன்றும் முத்தங்கி அலங்காரம் செய்யப்படும்.