மூங்கில் கோட்டை
மூங்கில் கோட்டை என்பது சாண்டில்யன் இயற்றிய புகழ் பெற்ற புதினமாகும்[1]. இது 'தமிழ் நேசன்' எனப்படும் மலேசிய நாட்டு தமிழ் இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் வானதி பதிப்பகத்தின் மூலம் நூலாக வெளியானது. இப்புதினம் கி.பி 3ஆம் நூற்றாண்டில் நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னனுக்கும் சேர சோழ மற்றும் சில குறுநில மன்னர்களுக்கும் இடையே நடந்த தலையானங்கானப் போருக்குப் பின்னர் நடந்தேறிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.[2]
![]() | |
நூலாசிரியர் | சாண்டில்யன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | வரலாற்றுப் புதினம் |
வெளியீட்டாளர் | வானதி பதிப்பகம் |
கதை
தொகுசேர மன்னன் நெடுஞ்செழியனின் மேல் மதிப்பு கொண்ட புலவர் விளங்கும் ‘குறுங்கோழியூர்கிழார்’ அவரை சிறையில் இருந்து வெளிக்கொண்டுவர நினைக்கிறார். அதற்கு நெடுஞ்செழியனின் சகோதரி ‘இமயவல்லி’ உதவுகிறாள். இதற்காக சேர நாட்டிலிருந்து ‘இளமாறன்’ எனும் இளைஞனை மதுரைக்கு வரவழைக்கிறார் புலவர். வந்த அன்றே அவன் மன்னரோடு மோத வேண்டி வருகிறது. மூங்கில் கோட்டைக்கு போகும் வழியில் பாண்டியனின் ஆசிரியரான ‘சித்தர்’ தடுத்து நிறுத்துவதோடு, அவர்களை கைது செய்யாமல் உள்ளே செல்ல அனுமதிக்கிறார். இதனால், இளமாறன் மூங்கில் கோட்டைக்கு செல்கிறான். மூங்கில் கோட்டையில் இருந்து எப்படி அவன் மன்னரை விடுவிக்கிறான்? மன்னரின் சகோதரி மேல் இளமாறன் கொண்ட காதல் நிறைவேறுகிறதா? சித்தர்–இளமாறன் இடையே உள்ள உறவு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தருவதே இந்நூலின் முடிவு.[3]
கதை உருவாக்கம்
தொகுஇளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ் செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இளவயதுள்ள நெடுஞ்செழியன், சோழர், சேரர் முதலிய எழுவர் படைகளைத் தலையாலங் கானத்தில் முறியடித்து சேரமானான யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் சிறைப்பிடித்தான். சிறைப்பிடித்ததன்றி, சிறை வைத்த இடத்தைச் சுற்றிலும் அகழிகளை வெட்டி அவற்றின் மேல் மூங்கில்களைப் பரப்பி மறைத்து வைத்ததால், சேரனை விடுவிக்க வந்த யானைப் படைகள் அந்த அகழிகளில் வீழ்ந்து அழிந்து போனதாக வரலாறு கூறுகிறது. இத்தகைய கொடுஞ் சிறையினின்று யானைக்கண் சேய் தந்திரத்தால் தப்பியதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இக்குறிப்புகளை, "பண்டை நாளையச் சேர மன்னர்கள்” என்ற வரலாற்று நூலில் பேராசிரியர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் மிகத் தெளிவாகத் தந்திருக்கிறார்கள்.
சேரனிடம் அன்பு மிக்க குறுங்கோழியூர்க்கிழார் என்ற புலவர், சோமான் தப்பியது குறித்துப் பாடிய சிறப்புப் பாடல்களும் மேற்படி வரலாற்று நூலில் இடம் பெற்றிருக்கின்றன. தவிர இந்த மூங்கில் கோட்டை சம்பவத்தைப் பற்றி ஸ்ரீ புஞ்சா முதலிய ஆசிரியர்களும் குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள். இந்த வரலாற்று நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நாவல் தான் மூங்கில் கோட்டை. இதில் கதாநாயகன், கதாநாயகி, சித்தர், பாண்டிய சேனாதிபதி ஆகியவர் களைத் தவிர மற்றவர்கள் வரலாற்றில் இடம் பெற்றவர்கள். இந்தச் சிறு வரலாற்று நிகழ்ச்சி யைப் பெரும் கதையாகவும், நவரசங்களும் இணையும்படியாகவும் அமைக்க, கூடியவரை கற்பனையுடன் இயற்றியிருக்கிறார் ஆசிரியர். இந்த நவீனம் மலேசியா நாட்டின் 'தமிழ் நேசன்' பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தது. மலேசிய நாட்டு மக்கள் பெரிதும் ரசித்த நூலாக இந்த நூல் விளங்கியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "மூங்கில் கோட்டை [Moongil Kottai]". Goodreads (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-02-04.
- ↑ "மூங்கில் கோட்டை". www.myangadi.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-02-04.
- ↑ "(சு)வாசிக்கப் போறேங்க!: சாண்டில்யனைப் போல சரித்திரக்கதை தமிழில் சொன்னவர் உண்டோ?". (சு)வாசிக்கப் போறேங்க!. 2020-03-17. பார்க்கப்பட்ட நாள் 2025-02-04.