மூணுகட்டை
சூது விளையாட்டு. திருவிழாக்காலங்களில் மக்கள் பணம் வைத்து விளையாடும் விளையாட்டாகும்.
மூணுகட்டை ஒரு சூது-விளையாட்டு. திருவிழாக் காலத்தில் மக்கள் பணம் கட்டி விளையாடுவர். இதில் பொதுவாக மக்களுக்கு ஏமாற்றமாகவே முடியும்.
ஆடும் முறை
தொகு6 கட்டங்கள் போடப்பட்ட அட்டையில் எண்களும் எண்ணைக் காட்டும் புள்ளிக்குறிகளும் வரையப்பட்டிருக்கும். மக்கள் தம் விருப்பம் போல எந்தக் கட்டத்தில் வேண்டுமானாலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கட்டலாம்.
ஆட்டம் காட்டுபவர் தாயக் கட்டையை உருட்டுவார். அதில் எந்த எண் விழுகிறதோ அந்த எண்-கட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் பணம் கட்டியவருக்கு இரு மடங்காகத் திருப்பித் தரப்படும். பிற கட்டங்களில் கட்டிய பணத்தை விளையாட்டுக் காட்டுபவர் சுருட்டிக்கொள்வார். இக்காலத்தால் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980