மூன்றாம் தரப்பு இனப்பெருக்கம்

மூன்றாம் தரப்பு இனப்பெருக்கம் என்பது கருவுறாத தனிநபர் அல்லது தம்பதியர் பெற்றோராக ஆவதற்கு மூன்றாம் நபர் வழங்கிய கருமுட்டை அல்லது விந்து பயன்படுத்துவதைக் குறிக்கிறது.

மூன்றாம் தரப்பு இனப்பெருக்கத்தில் சமூக நெறிமுறை மற்றும் சட்ட சிக்கல்கள் உள்ளன.

வகைகள் தொகு

  1. விந்தணு தானம் - என்பது ஆண் தன் மனைவியல்லாத பெண்ணைக் கருத்தரிக்கச் செய்யத் தன் விந்தைத் தானம் தருவதாகும்.
  2. முட்டை தானம் - ஒரு பெண் மற்றொரு பெண்ணை கருத்தரிக்க உதவுவதற்காக முட்டைகளை நன்கொடையாக அளிக்கும் ஒரு செயல்முறையாகும்.[1]
  3. கரு தானம்
  4. கரு தத்தெடுப்பு
  5. வாடகைத் தாய்

வாடகைத் தாய் தொகு

வாடகைத் தாய் என்பவர் மற்றொரு பெண் அல்லது தம்பதியருக்காக குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்ணாவார். மருத்துவரீதியாக குழந்தையை சுமைக்கும் தகுதியிழந்த பெண்ணிற்காக வாடகைதாய் முறையில் குழந்தையை பெற மருத்துவமனை உதவுகிறது.

  1. கருப்பை பலவீனமான பெண்ணிற்காக அவரின் கருவை சுமக்கும் வாடகைதாய் முறை கர்ப்பகால வாடகைத் தாய்மை எனப்படுகிறது.
  2. கருப்பை மற்றும் கரு இரண்டுமே தகுதியிழந்த பெண்ணிற்காக தனது கரு மற்றும் கருப்பை இரண்டையும் வைத்து செயற்கை முறையில் கருவூட்டல் பெற்று குழந்தையை வளர்க்கும் முறையை பாரம்பரிய வாடகைத் தாய்மை என்கின்றனர்.

ஆதாரங்கள் தொகு

  1. "உயிர் தானம் அறிவோம் - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in.