மூன்றாம் விசயாதித்தியன்
மூன்றாம் குணக விசயாதித்தியன் (Gunaga Vijayaditya III) (கி.பி. 848 – 892) வேங்கி அரசின் மிகவும் சக்திவாய்ந்த அரசராவார்.[1] இவரது இராணுவ வெற்றிகள் தக்காணத்தின் பெரும் பகுதியை அவரது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. இராட்டிரகூட பேரரசர் முதலாம் அமோகவர்சனின் மதிப்புமிக்க கூட்டாளியாக இருந்தார். அமோகவர்சரின் மரணத்திற்குப் பிறகு, இவர் சுதந்திரத்தை அறிவித்தார். குணகா, குணகே-நல்லட்டா, பரசக்ர ராமா, வல்லபா போன்ற பல பட்டங்களையும் பெற்றார்.[2][3]
மூன்றாம் விசயாதித்தியன் Vijayaditya III | |
---|---|
'குணகா குணகே-நல்லட்டா பரசக்ர ராமா வல்லபா' | |
இந்தியா அண். 753 CE. கிழக்கு சாளுக்கிய இராச்சியம் கிழக்கு கடற்கரையில் காட்டப்பட்டுள்ளது. | |
கீழைச் சாளுக்கியர் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | 848 – 892 கி.பி[1] |
முன்னையவர் | ஐந்தாம் காளி விசுணுவர்தனர் (847– 848 கி.பி) |
பின்னையவர் | முதலாம் பீமா துரோணார்ச்சுணர் (892 – 921 கி.பி) |
அரசமரபு | கீழைச் சாளுக்கியர் |
மதம் | இந்து சமயம் |
ஆட்சி
தொகுஇன்றைய நெல்லூர் மாவட்டமான பல்லவ இராச்சியத்தின் வடக்கு எல்லைகளில் வசித்த போர்வீரர்களின் உறுதியான இனமான போயா-கோத்தமாக்களை, இவரது திறமையான தளபதி பாண்டரங்காவின் தலைமையில் நசுக்கிய பயணத்துடன் இவரது ஆட்சி தொடங்கியது. கிளர்ச்சியாளர்களின் கோட்டையான கோத்தமா மற்றும் நெல்லூரை இவரது இராணுவம் கைப்பற்றியது. கந்துகூரை தலைமையிடமாகக் கொண்டு இணைக்கப்பட்ட பிரதேசத்தின் ஆளுநராக தளபதி பாண்டரங்கா நியமிக்கப்பட்டார். ரகானா என்ற தலைவரின் பிரதேசத்தையும் இவர்கள் கைப்பற்றினர்.[3][1]
தன்னுடைய முன்னோடிகளைப் போலல்லாமல் மூன்றாம் குணக விசயாதித்தியன், இராட்டிரகூடப் பேரரசர் முதலாம் அமோகவர்சருடன் நட்புறவைப் பேணி, மேலை கங்கர் மற்றும் பிற கலகக்காரர்களின் கிளர்ச்சியை நசுக்க கங்கவாடிக்கு அனுப்பப்பட்டார்.[4][3][1] அமோகவர்சரின் மரணம் வரை விசயாதித்யர் தனது நேரத்தை அவருக்காக ஒதுக்கி பின்னர் சுதந்திரத்தை நிறுவினார். அமோகவர்சரின் வாரிசான இரண்டாம் கிருட்டிணரை தோற்கடித்து, மத்திய இந்தியாவில் சேதி நாடு வரை தொடர்ந்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Sen, Sailendra Nath (1999). Ancient Indian History and Civilization (in ஆங்கிலம்). New Age International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1198-0.
- ↑ Nagabhusanasarma (2008). History and culture of the Andhras. Komarraju Venkata Lakshmana Rau Vijnana Sarvaswa Sakha, Telugu University, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186073070.
- ↑ 3.0 3.1 3.2 Mani, Chandra Mauli (2009). A Journey through India's Past (Great Hindu Kings after Harshavardhana) (in ஆங்கிலம்). Northern Book Centre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7211-256-1.
- ↑ Ramesan, N. (1975). The Eastern Chalukyas of Vengi (in ஆங்கிலம்). Andhra Pradesh Sahithya Akademi.
- ↑ Sastri, Nilakanta K.A. (2002) [1955]. A history of South India from prehistoric times to the fall of Vijayanagar. New Delhi: Indian Branch, Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8.