மூன்று மங்கள வார்த்தை செபம்
மூன்று மங்கள வார்த்தை செபம் என்பது கத்தோலிக்க திருச்சபையில் மரபு சார்ந்த மரியாவின் பக்தி முயர்சிகளில் ஒன்றாகும். இது நாள்தோறும் மரியாவை நோக்கி மங்கள வார்த்தை செபத்தினை மும்முறை செபிப்பது ஆகும். இதை இரவு தூங்குவதற்கு முன், ஆன்மசோதனை செய்துவிட்டு செபிப்பது வழக்கம். இப்பழக்கத்தை புனிதர்களான அந்தோனியார், அல்போன்ஸ் மரிய லிகோரி, ஜான் போஸ்கோ முதலியோர் பின்பற்றினர், பிறரையும் பின்பற்ற ஊக்குவித்தனர். தூய கன்னி மரியாவிடமிருந்து பல புனிதருக்கு இது குறித்த காட்சிகள் கிடைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
திருத்தந்தை இருபத்திரண்டாம் யோவானால் இச்செபமானது முதலில் 1318இலும் பின்னர் 1327இலும் பரிந்துரைக்கப்பட்டு பரிபூரண பலன் உடையதாக 1846இல் அறிவிக்கப்பட்டது..[1] இவ்வழக்கமானது முதலில் பிரான்சிஸ்கன் சபையினாரிடம் துவங்கி பின்னர் அது மூவேளை செபமாக மாறியது.[1]