மூன்று வகை மின்சுற்றுகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மின்னுாட்டம் பாய்வதற்கு மூடப்பட்ட மின்கடத்தும் சுற்றுப்பாதை தேவை. இதை உருவாக்க மின்கலம் அல்லது மின்கலன்கள் , மின்பொத்தான், மின்விளக்கு இவை அனைத்தும் கடத்துக்கம்பிகளால் இணைக்கப்பட்ட ஒரு சுற்று. இந்த மூடப்பட்ட சுற்றே மின்சுற்று ஆகும்.
எளிய மின்சுற்று
தொகுஒரு மின்கலம் ஒரு மின்விளக்கு மற்றும் ஒரு மின்பொத்தான் ஆகியவைக் கொண்ட சுற்று எளிய மின்சுற்று. இங்கு மின்பொத்தான் மூலம் மின்சுற்று மூடப்படும்போது மின்விளக்கு எாிகிறது. ஏனெனில் மின்னோட்டம் பாய்வதற்கு ஒரு தாெடா்ச்சியான மூடப்பட்ட பாதை இருக்கிறது.
தாெடா் மின்சுற்று
தொகுஒவ்வொரு மின்விளக்கின் முனையும் மற்றொரு மின்விளக்கின் முனையோடு தாெடா்ச்சியாக இணைக்கப்பட்டு இருப்பது தொடா் மின்சுற்று. இதில் மின்னோட்டம் ஒரே திசையில் பாய்கிறது. அனைத்து மின்விளக்குகள் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் பாய்கிறது.
பக்க இணைப்பு சுற்று
தொகுஒவ்வொரு மின்விளக்கும் தனித்தனியாக மின்கம்பிகள்மூலம் மின்கலத்தின் இருமுனைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய மின்சுற்றில் ஒவ்வொரு மின்விளக்கின் வழியாகவும் வெவ்வேறு அளவு மின்சாரம் பாய்கிறது.
மேற்கோள்
தொகுமின்னியலும் காந்தவியலும்- டி.சி.தயாள்