மூன் அங்காடி
மூன் அங்காடி (Moon Market) என்பது பாக்கித்தானிலுள்ள ஒரு பெரிய பிரபலமான அங்காடியாகும். இவ்வங்காடி லாகூரின் துணை நகரமான அல்லாமா இக்பால் நகரத்தில் அமைந்துள்ளது. இவ்வங்காடியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், உணவு அங்காடிகள் , தங்கும் விடுதிகள், பொழுது போக்கு இடங்கள்[1] மற்றும் கடைகள், மளிகை கடைகள் முதலியவை அமைந்துள்ளன.
இவங்காடியில் ஏற்கனவே கட்டப்பட்ட 67 கடைகளை, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லாகூர் வளர்ச்சி அமைப்பு ஏலம் விட முடிவு செய்தது. லாகூர் நகரத்தின் வர்த்தகம் மற்றும் வியாபாரத்தை ஊக்குவிக்கும் விதமாக அதிக தொகை செலுத்தி ஏலம் எடுப்பவருக்கு அக்கடைகளை வழங்கவும் முடிவு செய்தது. இங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை பாதுகாப்புடன் நிறுத்துவதற்கு வசதியாக இந்த பத்து அடுக்கு மாடியில் இரண்டு மாடிகள் ஒதுக்கப்பட்டன. இவ்வாகனம் நிறுத்தும் இடத்தில் 400 வாகனங்களும், 500 இரு சக்கர வாகனங்களும் ஒரே நேரத்தில் நிறுத்த இயலும், எதிர்காலத்தில் அங்காடியின் மேற்கூரையில் ஒரு கூரை உணவு விடுதி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிருந்து அங்காடியைச் பறவைப் பார்வையுடன் சுற்றிப்பார்த்து இரசிக்க இயலும்[2][3][4].
மேற்கோள்கள்
தொகு- ↑ Haider Ali (4 July 2016). "Lahoris remain busy in Eid shopping amid intense bargaining". Daily Times (newspaper). பார்க்கப்பட்ட நாள் 29 January 2018.
- ↑ Parking Plaza at Moon Market, Allama Iqbal Town lahoreworld.com website, Retrieved 29 January 2018
- ↑ Detailed map of Moon Market in Lahore area GoogleMaps on maplandia.com website, Retrieved 29 January 2018
- ↑ Lahore Development Authority relaxes payment plan for Moon Market Plaza shops Pakistan Today (newspaper), Published 22 March 2016, Retrieved 29 January 2018