மூர்த்தி (நக்சலைட்)

மூர்த்தி என அறியப்பட்ட குப்பு தேவராஜ் எனபவர் தமிழ்நாட்டின், கிருட்டிணகிரியைச் சேர்ந்த ஒரு நக்சல் தலைவராவார். இவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடக மாவோயிஸ்ட் (மக்கள் யுத்தக் குழு) தலைமைத் தோழராகவும், 15 ஆண்டுகளாக தமிழ்நாடு, கேரளா மாநில பொறுப்பாளராகவும் இருந்தவர். 20 ஆண்டுகளாக மாவோயிஸ்ட் கட்சியின் மையக் குழு உறுப்பினராக இருந்தவர். இவர் பன்மொழியில் வல்லவராக இருந்தார். தமிழராக இருந்தபோதிலும் கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் திறன் பெற்றிருந்தார். நான்கு மொழிகளிலும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மொழிபெயர்க்கும் அறிவைப் பெற்றிருந்தார்.

அரசியல் வாழ்வு தொகு

மூர்த்தி தமிழகத்தின் கிருட்டிணகிரியில் பிறந்தவர். என்றாலும், பெங்களுருவில் படித்து வளர்ந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்தது தாய் அம்மணி அம்மாளால் வளர்க்கப்பட்டவர். மூர்த்தியின் அரசியல் வாழ்க்கை 1980 களின் துவக்கத்தில் துவங்கியது. எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் பலமான கட்சியாக மக்கள் யுத்தக் குழு உருவானது. துவக்கத்தில் காந்தியவாதியாக இருந்த மூர்த்தியை தொடர்ந்த விவாதத்தின் வழியாக அவரது நண்பர்கள் பொதுவுடமையாளராக மாற்றினர். இக்காலகட்டத்தில் வேலையை விட்டு முழுநேர அரசியல் பணியை மூர்த்தி மேற்கொண்டார். இவரின் அறிவுஜீவித்தனம், களப்பணித்திறன் ஆகியவற்றின் காரணமாக 1987 இல் நடந்த கர்நாடக மாநில மாநாட்டில் மாநிலக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, கர்நாடகத்தின் ரெய்ச்சூர் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1995 இல் நடந்த அனைத்திந்திய சிறப்பு மாநாட்டில் மையக் குழுவின் மாற்று உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இம்மாட்டில் நடந்த அரசியல் விவாதங்களில் தமிழ்நாடு, கர்நாடகத் தோழர்களின் சார்பாக இவரே தலைமையேற்று நடத்தினார்.[1]

மரணம் தொகு

கேரள மாநிலம் நீலாம்பூர் வனப்பகுதியில் 2016 நவம்பர் மாத இறுதியில் காவல்துறை அதிரடிப்படையால் மூர்த்தி, அஜிதா உட்பட மூன்றுபேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்தது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. துரை சிங்கவேல் (26 நவம்பர் 2016). "வீரவணக்கம்! மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்பு தேவராஜிற்கும், அஜிதாவிற்கும் வீரவணக்கம்!". கட்டுரை. கீற்று. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2016.
  2. [கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் உடல் கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் "கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் உடல் கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்படுவதாக தகவல்"]. செய்தி. தி இந்து. 26 நவம்பர் 2016. கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் உடல் கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்படுவதாக தகவல். பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூர்த்தி_(நக்சலைட்)&oldid=3578097" இலிருந்து மீள்விக்கப்பட்டது