மூலக்கூறு பொருத்தி
மூலக்கூறு பொருத்தி என்பது பரிந்துரையில் இருக்கும் ஒரு நானோ தொழில்நுட்ப அணுக் கருவி. அணு நிலையில் வேதியியல் கூறுகளைப் பொருத்தி பொருட்களை உருவாக்க வல்ல கருவியை மூலக்கூறு பொருத்தி என்பர். இதை சற்று நீட்டி, இதன் ஒரு பண்பாக தன்னை தானே உருவாக்கும் திறனும் கூறப்படுகிறது.
அதாவது, மூலக்கூறு பொருத்தி வேதியியல் தாக்கத்தை விளைவிக்கக் கூடிய மூலக்கூறுகளைத் தகுந்த நிலைகளில் பொருத்தி, குறிப்பிட்ட வேதியியல் தாக்கத்தைத் தோற்றுவிக்கும்.
இது தற்போது ஒரு தொடக்க கட்ட நிலையில் இருக்கும் ஒரு கருதுகோள் மட்டுமே ஆகும்.