மூலக்கூற்று
மூலக்கூற்று (premise) என்பது ஒரு வாதத்தில் அடிப்படை உண்மைகளாக முன்வைக்கப்படும் கூற்றுக்கள் ஆகும்[1]. இந்த அடிப்படை உண்மைகளையும் ஏரண முறைமையும் கொண்டு வாதமும் அதன் முடிவுகளும் கட்டமைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக:
- மூலக்கூற்று 1: எல்லா மனிதருக்கும் இதயம் உண்டு.
- மூலக்கூற்று 2: குமரன் ஒரு மனிதன்.
- முடிவு: குமரனுக்கு ஒரு இதயம் உண்டு.
மேலே ஊகிக்கும் முறையால் (Deductive reasoning) குமரனுக்கு இதயம் உண்டு என்பது நிரூபிக்கப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Argument: a sequence of statements such that some of them (the premises) purport to give reasons to accept another of them, the conclusion" : The Cambridge Dictionary of Philosophy, 2nd Edition (Cambridge University Press), editor Robert Audi, 43.