மூலதன சேவைகள்
பொருளியலில் மூலதனச் சேவைகள் (Capital services) என்பது சொத்துக்கள் மற்றும் மென்பொருள் பங்குகளில் இருந்து பெறப்பட்ட சேவைகளின் சங்கிலி வகை குறியீட்டைக் குறிக்கின்றன. மூலதனச் சேவைகள் என்பது ஒருங்கிணைப்பு உபகரணங்கள், மென்பொருள்கள், கட்டமைப்புகள், நிலம், சரக்கு மற்றும் அவற்றின் மதிப்புகளை உள்ளடக்கியது. மூலதனச் சேவைகள் ஒவ்வொரு தனிப்பட்ட சொத்தின் மூலதன-வருவாயின் சராசரி வளர்ச்சி விகிதமாக மதிப்பிடப்படுகின்றன. மூலதனப் பங்குகளில் இருந்து மூலதனச் சேவைகள் வேறுபடுகின்றன. நிலம் போன்ற நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் சொத்துக்கள் தரக்கூடிய மூலதனச் சேவைகளைவிட, குறுகிய காலச் சொத்துகளான இயந்திரங்கள் மற்றும் மென்பொருள்கள் போன்றவை தரக்கூடிய மூலதனச் சேவைகள் அதிகமாகும்.[1] மூலதனச் சேவைகளை ஒரு நபராகவோ அல்லது குழுவாகவோ வழங்க இயலும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "BLS Information". Glossary. U.S. Bureau of Labor Statistics Division of Information Services. February 28, 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-05-05.
- ↑ "Capital Goods and Services". University of North Carolina. Archived from the original on 2015-05-11. பார்க்கப்பட்ட நாள் 2009-05-06.