மூலாதாரம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
மூலாதாரம் என்பது யோக சாத்திரங்களால் குறிப்பிடப்படும் சக்கரங்களில் ஆரம்ப சக்கரம் ஆகும். உறங்கும் நிலையில் குண்டலினி சக்தியானது உறையும் இடமாக மூலாதாரம் சொல்லப்படுகின்றது.
உடற்பகுதி
தொகுஆண் உடலில் தண்டுவடதின் அடிப்பகுதியில், பிறப்புறுப்புகளுக்கும், மலத்துவாரத்திற்கும் இடையே அமைந்துள்ளது. பெண் உடலில் கருப்பையின் கழுத்துப்பகுதியில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
தொகுமூலம் : வேர் அல்லது ஆதாரம் ; ஆதாரம்: இடம் அல்லது மையம். வேர்ப்பகுதி சுழல் மையம் எனலாம்.
குறியீடுகள்
தொகுமூலாதாரம் நான்கு இதழ்களையுடைய அடர்சிவப்பு தாமரை மலராக உருவகப்படுத்தப் படுகிறது. தாமரை இதழ்களின் மையப்பகுதியில் மஞ்சள் நிற சதுரம் உள்ளது. சதுரத்தின் மத்தியில், படைக்கும் ஆற்றலின் சின்னமாக ஒரு தலைகீழ் சிவப்பு முக்கோணம் உள்ளது. முக்கோணத்தினுள் மனிதனுடைய ஆவி உடலின் சின்னமாக புகை வண்ணத்தில் சுயம்பு லிங்கம் உள்ளது. உறங்கும் நிலையில் உள்ள குண்டலினியை சித்தரிக்கும் வகையில் சென்னிற பாம்பு மூன்றரை முறை தன்னுடைய வாலால் லிங்கத்தை சுற்றி வளைத்துள்ளது. ஏழு துதிக்கைகளையுடைய ஒரு யானையால் சிவப்பு முக்கோணம் தாங்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.