மூழிக்கல் பங்கசாக்சி

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர்

மூழிக்கல் பங்கசாக்சி (Moozhikkal Pankajakshi) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞராவார். நோக்குவித்யா பவக்கலி என்ற பொம்மலாட்டக் கலைவடிவத்தின் கடைசி தலைமுறைக் கலைஞராக இவர் அறியப்படுகிறார்.

நோக்குவித்யா பவக்கலி கலைவடிவம் பல நூற்றாண்டுகள் பழமையான பொம்மலாட்டத்தின் தனித்துவமான வடிவமாகும். இந்த பொம்மலாட்ட வடிவ கலைஞருக்கு மேல் உதட்டில் பொம்மைகளை சமநிலைப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இவர்கள் பொம்மைகளின் இயக்கங்களை நிலையான பார்வையுடன் நிர்வகிக்க வேண்டும். நூலை தேவைக்கேற்ப கட்டுப்படுத்தவும் தெரிய வேண்டும். பொறுமையும் செறிவும் இந்த தனித்துவமான கலை வடிவத்தை கற்று தெளிவதற்கு தேவையான முக்கியமான திறவுகோல்களாகும்.

ஐந்து நூற்றாண்டுகளாக, மூழிக்கல் பங்கசாக்சியின் மூதாதையர்கள் கேரளாவில் நோக்குவித்யா பவக்கலி கலையை பயிற்சி செய்து வந்துள்ளனர். 8 வயதிலிருந்தே, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இந்த பழங்குடி பொம்மை நாடக வடிவத்தை நிகழ்த்துவதன் மூலம் அவர்களின் பாரம்பரியத்தை இவர் முன்னெடுத்து வருகிறார். 81 வயதான அவர் ஒரு பாரம்பரிய கலை வடிவத்தை பாதுகாத்த பெருமைக்குரியவராவார்.[1] இக்கலை இன்று அழிவின் அச்சுறுத்தலில் உள்ளது.

2020 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது கலைச் சேவைக்காக இவருக்கு வழங்கப்பட்டது. [2][3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Shri Honour For Last Practitioner Of Kerala's Traditional Puppetry". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
  2. "Puppetry still means the world to muthassi at 84'". Deepika Jayaram. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2021.
  3. "Padma Shri Honour For Last Practitioner Of Kerala's Traditional Puppetry". Sanya Jain. NDTV. 30 January 2000. பார்க்கப்பட்ட நாள் 3 April 2021.
  4. "Last Practitioner Of Kerala's Nokkuvidya Pavakali Puppetry Honoured With Padma Shri". Ruchit Rastogi. Republic World. 1 February 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2021.
  5. "'Nokku Vidya Paavakali is grandma's life'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 January 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூழிக்கல்_பங்கசாக்சி&oldid=3315526" இலிருந்து மீள்விக்கப்பட்டது