நீரில் மூழ்கி விளையாடும் மூழ்கல் விளையாட்டைச் சங்கப்பாடல் ஒன்று காட்டுகிறது.
இது நீர் விளையாட்டுகளில் ஒன்று.
இது ஆடவர் விளையாட்டு.
இளமைக் காலத்தில் விளையாடப்படும்.
அது நெறிமுறைகளைக் கல்லாத துடுக்குத்தனமான இளமை.

'துடும்' எனப் பாய்ந்து மூழ்கல்
மகளிர்
மகளிர் மணலில் பாவை செய்து, பூ மாலை போட்டு, குளத்தில் இறக்கி, நீராடுவர்.
தழுவல்
இளைஞர் அவர்களுடன் கை கோத்துக்கொண்டு ஆடுவர். அவர்களிடம் ‘மறை’ என்று சொல்லப்படும் களவொழுக்கம் இல்லை.
நீரில் மூழ்கல்
இளைஞர் குளத்தில் நீராடும் மகளிரை அழைத்துக்கொண்டு ஆற்றில் நீராடச் செல்வர். ஆற்றுத்துறையில் அக்காலத்தில் மருத மரங்கள் மிகுதி. நீர்த்துறையின் பக்கம் சாய்ந்திருக்கும் அந்த மருதமரக் கிளை ஒன்றில் ஏறி, கரையிலுள்ளோர் மருளும்படி, நீரில் ‘துடும்’ எனப் பாய்ந்து, நீரின் ஆழம் வரையில் சென்று, அதன் அடிமண்ணைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து காட்டி மகிழ்வர். இது மூழ்கல் விளையாட்டு.[1]

இது மூச்சுக்குப் பயிற்சி தரும் விளையாட்டு.

அடிக்குறிப்பு தொகு

 1. திணிமணல்
  செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
  தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
  தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
  மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
  உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
  நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
  கரையவர் மருளத், திரையகம் பிதிர,
  நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
  குளித்துமணற் கொண்ட கல்லா இளமை (புறநானூறு 243)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூழ்கல்&oldid=3093475" இருந்து மீள்விக்கப்பட்டது