மூவாக்சேன்

மூவாக்சேன் (Trioxane) என்பது C3H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட குளோரினேற்றம் செய்யப்பட்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் மூன்று கார்பன் அணுக்கள் மற்றும் மூன்று ஆக்சிசன் அணுக்கள் சேர்ந்து உருவாகும் ஆறு உறுப்பினர் வளையத்தைக் கொண்டிருக்கிறது. C3H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டையே கொண்ட மூன்று மாற்றியக் கரிமச்சேர்மங்கள் காணப்படுகின்றன.

மூவாக்சேன் மாற்றியங்கள்:1,2,3-மூவாக்சேன் (இடது), 1,2,4-மூவாக்சேன் (நடுவில்), மற்றும் 1,3,5-மூவாக்சேன் (வலது)

அவை:

  • 1,2,3-மூவாக்சேன், இது ஒரு கருத்தியலான சேர்மம் ஆகும். மோலோசோனைடுடன் தொடர்புடைய சேர்மமாக இது கருதப்படுகிறது [1].
  • 1,2,4-மூவாக்சேன், இதுவும் ஒரு கருத்தியலான சேர்மம் ஆகும் இதன் கட்டமைப்பு ஆர்ட்டிமிசினின் மற்றும் இதைப்போன்ற மலேரிய எதிர்ப்பு முகவர்களின் கட்டமைப்புத் தோற்றத்தில் காணப்படுகிறது [2].
  • 1,3,5-மூவாக்சேன், இச்சேர்மம் பார்மால்டிகைடின் முப்படியாகக் கருதப்படுகிறது. எரிபொருள் மற்றும் நெகிழி தயாரிப்பில் பயன்படுகிறது. எக்சாமீனுடன் சேர்க்கப்பட்டு பயன்படுத்தும்போது திண்ம எரிபொருளாகவும் பயனாகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Lay, Tsan H.; Yamada, Takahiro; Tsai, Po-Lun; Bozzelli, Joseph W. (1997). "Thermodynamic Parameters and Group Additivity Ring Corrections for Three- to Six-Membered Oxygen Heterocyclic Hydrocarbons". Journal of Physical Chemistry A 101 (13): 2471–2477. doi:10.1021/jp9629497. 
  2. Gary H. Posner, Mikhail Krasavin, Michael McCutchen, Poonsakdi Ploypradith, John P. Maxwell, Jeffrey S. Elias, Michael H. Parker (2001). "New antimalarial trioxanes and endoperoxides". Antimalarial Chemotherapy: 255–263. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவாக்சேன்&oldid=2567818" இலிருந்து மீள்விக்கப்பட்டது