மெஃபெனமிக் காடி

வேதிச் சேர்மம்

மெஃபெனமிக் காடி (Mefenamic acid) ஒரு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் பகுப்பில் அடங்கும் மருந்து ஆகும். இது பொதுவாக வலி , மாதவிடாய் வலி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இம்மருந்து ஃபெனமிக் அமிலக் கிளைப் பொருள்கள் வகைக்குள் அடங்குகின்றது. இம்மருந்து Mefalth, Mefalth T, Ponstel, Ponstan, Ponstal போன்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது.[1]

வேறு வணிகப் பெயர்கள்
Parkemed, Mafepain, Mefamed, Mephadolor, Meftal, Dyfenamic, Potarlon, Dolfenal, Meyerdonal, Alfoxan, Fenagesic, Spiralgin.

மருத்துவப் பயன்பாடு

தொகு

பொதுவாக வலி , மாதவிடாய் வலி (வலிமிக்க மாதப்போக்கு) போன்ற நோய்களுக்கு மெஃபெனமிக் காடி பயன்படுத்தப்படுகின்றது, இவை தவிர பலவகை மூட்டழற்சியால் ஏற்படும் வலி போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

பக்க விளைவுகள்

தொகு

இம்மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரதான பக்கவிளைவுகள் வாந்தி, தலைவலி, பதட்டம் ஆகும். இவற்றைத்தவிர காதில் ரீங்காரம், வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு, பார்வை மங்கல், வயிற்றுப் பொருமல், தூக்கமின்மை பக்க விளைவுகளும் மெஃபெனமிக் காடி பயன்பட்டால் ஏற்படும்.

பயன்பாட்டெதிர் நிலைகள்

தொகு

இம்மருந்து குடற்புண், ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்கள் வந்தவர்களில் அல்லது இருப்பவர்களில் அறவே பயன்படுத்தக் கூடாது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.mims.com/India/drug/search/Mefenamic[தொடர்பிழந்த இணைப்பு] acid?page=1
  2. http://www.rxlist.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெஃபெனமிக்_காடி&oldid=3351399" இலிருந்து மீள்விக்கப்பட்டது