மெக்கோர்மேக் வினை

கரிம பாசுபரசு சேர்மங்கள் தயாரிப்பு முறை

மெக்கோர்மேக் வினை (McCormack reaction) என்பது கரிம பாசுபரசு சேர்மங்களைத் தொகுப்பு முறையில் தயாரிக்க உதவும் ஓரு முறையாகும். இவ்வினையில் 1,3-டையீன் மற்றும் R2P+ வை வழங்கும் ஒரு மூலம் ஆகியன இணைந்து பாசுபோலீனியம் நேர்மின் அயனியைக் கொடுக்கின்றன. டுபாண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சியாளர் டபிள்யு பி மெக்கோர்மேக் இவ்வினையைக் கண்டறிந்த காரண த்தால் மெக்கோர்மேக் வினை என்ற பெயர் சூட்டப்பட்டது. மெக்கோர்மேக் வினையை விவரிக்கும் வினை ஒன்றில் பீனைல்டைகுளோரோபாசுபீனும் ஐசோபிரீனும் பங்கேற்கின்றன :[1]

.

சுற்று வளைய [2+4] செயல்முறை வழியாக வினை நிகழ்கிறது. வினையில் விளையும் விளைபொருள்களை நீராற்பகுப்பு செய்து பாசுப்பீன் ஆக்சைடு பெறப்படுகிறது. ஐதரசன் ஆலைடு நீக்க வினையில் பாசுப்போல் உருவாகிறது[2].

மேற்கோள்கள்

தொகு
  1. W. B. McCormack (1973). "3-Methyl-1-Phenylphospholene oxide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV5P0787. ; Collective Volume, vol. 5, p. 787
  2. Handbook of organophosphorus chemistry by Robert Engel, CRC Press, 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-8733-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்கோர்மேக்_வினை&oldid=2749911" இலிருந்து மீள்விக்கப்பட்டது