மெசொபொத்தேமியக் கலை

மெசொபொத்தேமியக் கலை என்பது மிகப் பழைய காலத்திலேயே இயூபிரிட்டீசு, டைகிரிசு ஆகிய ஆறுகளின் அருகில் செழித்திருந்த மெசொபொத்தேமிய நாகரிகக் காலத்தைச் சேர்ந்த கலையைக் குறிக்கும். கிமு 10 ஆவது ஆயிரவாண்டுக் காலத்தில், வேட்டையாடுதல், உணவுசேகரித்தல் நிலையில் வாழ்ந்த சமூகத்தினர் தொடக்கம், வெண்கலக் காலத்தில் செழித்தோங்கிய சுமேரிய, அக்காடிய, பபிலோனிய நாகரிகத்தினர் வரை உருவாக்கிய கலைப்பொருட்கள் தொடர்பான சான்றுகள் இப்பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைத்துள்ளன. அவற்றை அடுத்து இரும்புக் காலத்தில் செழித்திருந்த புது-அசிரிய, புது-பபிலோனியப் பேரரசுகளின் காலத்திலும் கலைகள் செழித்து வளர்ந்தமைக்கான சான்றுகள் உள்ளன. உலக நாகரிகத்தின் தொட்டில் எனப் பரவலாகக் கருதப்படும் மெசொப்பொத்தேமியா உலகுக்கு எழுத்து முறையை வழங்கியது உட்படப் பண்பாட்டு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெசொபொத்தேமியக்_கலை&oldid=2700571" இலிருந்து மீள்விக்கப்பட்டது