மெட்டாவிவியானைட்டு

பாசுப்பேட்டு கனிமம்

மெட்டாவிவியானைட்டு (Metavivianite) என்பது (Fe3+2(PO4)2(OH)2•6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நீரேறிய இரும்பு பாசுப்பேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலில் ப;வேறு நிலவியல் தளங்களிலும் இது காணப்படுகிறது. ஓர் இரண்டாம்நிலை கனிமமாக விவியானைட்டின் ஆக்சிசனேற்ற மற்றும் நீரேற்ற கனிமமாக மெட்டாவிவியானைட்டு உருவாகிறது. [1] குறிப்பாக அடர் நீலம் அல்லது அடர் பச்சை நிறங்களில் பட்டகம் முதல் தட்டை வரையிலான படிக வடிவங்களில் இது கிடைக்கிறது.

மெட்டா விவியானைட்டு
Metavivianite
ஆக்சிசனேற்றப்பட்ட விவியனைட்டு 6x4 செ.மீ அளவுள்ள ஆலிவ்-பச்சை முதல் பச்சை நிற புறத்தோற்றமுள்ள மெட்டாவிவியானைட்டு - கெர்ச்சென்சுகோ படிவு, கிரிமியா ஒப்லாசுட்டு, உக்ரைனில் கிடைத்தது - புகைப்படம் மற்றும் சேகரிப்பு மாதிரி பாவெல் கர்தாசோவ்
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுFe3+
2
(PO
4
)
2
(OH)
2
•6H
2
O
இனங்காணல்
மோலார் நிறை443.734 கி/மோல்
நிறம்அட்டர் நீலம் முதல் கருநீலம் வரை; அடர் பச்சை முதல் கரும் பச்சை
படிக இயல்புகத்தி போன்ற படிகங்கள்.
படிக அமைப்புTriclinic
இரட்டைப் படிகமுறல்{110}
பிளப்பு{110} இல் சரிபிளவு
விகுவுத் தன்மைவெட்டுப்படும்
மோவின் அளவுகோல் வலிமை1.5-2
மிளிர்வுதுணை கண்ணாடி பளபளப்பு,பிசின்,மசகு, மந்தம்
கீற்றுவண்ணம்நீலம் முதல் பசும் நீலம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.69
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.600 - 3.000, nβ = 1.640 - 3.000, nγ = 1.685 - 3.000[1]
இரட்டை ஒளிவிலகல்δ = 0.050 - 0.085
பலதிசை வண்ணப்படிகமைபுலப்படும்; X = நீலம் முதல் நீலப்-பச்சை; Y,Z = மஞ்சள்-பச்சை
2V கோணம்அளக்கப்பட்டது: 85° (5), கணக்கிடப்பட்டது: 90°
நிறப்பிரிகைபலவீனமானது
புறவூதா ஒளிர்தல்ஓளிர்பொருளல்ல
மேற்கோள்கள்[1][2][3]

கட்டமைப்பு ஒப்புமை காரணமாக சி. இரிட்சு, எரிக் யே.எசீன் மற்றும் தொனால்டு ஆர் பீக்கர் ஆகியோர் 1974 ஆம் ஆண்டு இதற்கு மெட்டா விவியானைட்டு என்ற பெயரைச் சூட்டினர். [2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 John W. Anthony; Richard A. Bideaux; Kenneth W. Bladh; Monte C. Nichols (2005). Handbook of Mineralogy. Mineral Data Publishing. http://www.handbookofmineralogy.org/pdfs/metavivianite.pdf. 
  2. 2.0 2.1 Metavivianite (Mindat.org)
  3. Metavivianite Webmineral Data
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டாவிவியானைட்டு&oldid=2960101" இலிருந்து மீள்விக்கப்பட்டது