மெட்ராஸ் (துணி)
மெட்ராஸ் (madras) என்பது கோடை காலங்களில் அணிவதற்கான குறைந்த கனமுள்ள துணி வகையைக் குறிக்க மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். பொதுவாக இந்த துணியின் முன்புறமும் பின்புறமும் ஒரே மாதிரியாக இருக்கும்.
மெட்ராஸ் துணி வகைகளுள் குருதி வழியும் மெட்ராஸ் (bleeding madras) என்பது புகழ்பெற்றது. இதில் பயன்படுத்தப்படும் சாயம் துணியில் சரியாக ஒட்டாது. எனவே ஒவ்வொரு முறை சலவை செய்யும் சாயம் வழிந்தோடி இதன் வடிவம் மாறும். இந்தியத் தொழிலதிபர் சி. பி. கிருஷ்ணன் நாயர் இவ்வகைத் துணிகளின் முன்னோடி ஆவார்.[1]
மேற்கோள்கள்தொகு
- ↑ Vir Sanghvi (February 12, 2011). "Hotel Leela's Captain Courageous". Hindustan Times New Delhi. Archived from the original on ஆகஸ்ட் 30, 2011. https://web.archive.org/web/20110830002953/http://www.hindustantimes.com/Hotel-Leela-s-Captain-Courageous/Article1-661465.aspx.