மெத்தின் குழு
மெத்தின் குழு (Methine group) என்பது =CH− என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படும் மூவிணைதிற வேதி வினைக்குழுவாகும். மெத்தின் பாலம், மெத்தைன், மெத்தீன் என்ற பெயர்களாலும் இக்குழு அழைக்கப்படுகிறது. மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாட்டிலிருந்து மெத்தின் குழு வருவிக்கப்படுகிறது. இரண்டு ஒற்றைப்பிணைப்புகளும் ஒரு இரட்டைப் பிணைப்பும் சூழ்ந்துள்ள ஒரு கார்பன் அணு இக்குழுவில் உள்ளது. ஒற்றைப் பிணைப்பு ஒன்றுடன் ஐதரசன் அணு இணைக்கப்பட்டிருக்கும். ஐயுபிஏசி முறையில் மெத்திலைலிடின் அல்லது மீத்தேனையிலிடின் என்ற பெயரால் இக்குழு அடையாளப்படுத்தப்படுகிறது. [1]
இந்த குழு சில நேரங்களில் மெத்திலிடைன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இருப்பினும் ஐதரசன் அணுவுடன் பிணைக்கப்பட்டுள்ள கார்பன் அணு மீதமுள்ள மூலக்கூறுடன் முப்பிணைப்பால் இணைக்கப்பட்டிருக்கும் மெத்திலிடைன் (≡CH) குழுவுக்கு அல்லது மெத்திலிடைன் இயங்குருபுவுக்கு (⫶CH) இப்பெயர் உரியதாகும். இயங்குருபில் இரண்டு அணுக்கள் தனி மூலக்கூறாக தொங்கும் பிணைப்புகளுடன் காணப்படும்.
மெத்தின்" என்ற பெயர் நான்கு ஒற்றை பிணைப்புகளைக் கொண்ட கார்பன் அணுவில் ஒரு பிணைப்பு ஐதரசனுடன் இணைந்துள்ள மீத்தேன்டிரைல் (>CH−) என்ற குழுவிற்கான ஐ.யு.பி.ஏ.சி முறையற்ற பெயரிடலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. [2]
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மெத்தின் பாலங்கள் மேற்பொருந்தி சங்கிலி அல்லது வளைய கார்பன் அணுக்களாக உருவாக முடியும். இக்கார்பன் அணுக்கள் ஒன்றுவிட்டு ஒன்றாக மாறி மாறி ஒற்றை மற்றும் இரட்டை பிணைப்புகளால் பிணைக்கப்பட்டிருக்கும். பிப்பெரைலீன் (H2C=CH−CH=CH−CH3) அல்லது கீழ்கண்ட சேர்மம் இதற்கு உதாரணமாகும்.
இந்த மூலக்கூறில் உள்ள ஒவ்வொரு கார்பன் அணுவும் ஒரு மெத்தீன் கார்பன் அணு ஆகும்; மூன்றாவது கார்பன் அணு மட்டும் எந்த ஐதரசன் அணுக்களுடனும் இணைக்கப்படாமல் இரண்டு நைட்ரசன் அணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதான் வலது தொலைவில் இரண்டு ஐதரசன் அணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மூலக்கூறின் மையத்தில் ஐந்து கார்பன்-அணு பல்-மெத்தீன் சங்கிலி உள்ளது.
மாற்று ஒற்றை மற்றும் இரட்டை பிணைப்புகளாலான சங்கிலிகள் மூடும்போது அவை பென்சீனில் உள்ளதைப் போல (=CH−CH=)3 ஒருங்கிணைந்த அமைப்புகளை உருவாக்குகின்றன. பெரும்பாலும் இவை சேர்மத்திற்கு அரோமாட்டியத் தன்மையைக் கொடுக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ (2007) Methanylylidene group in the Chemical Entities of Biological Interest (ChEBI) database. Accessed on 2015-03-05.
- ↑ (2007) Methanetriyl group in the Chemical Entities of Biological Interest (ChEBI) database. Accessed on 2015-03-05.