மெத்திலோபாக்டீரியம் அஜ்மாலி

மெத்திலோபாக்டீரியம் அஜ்மாலி
Methylobacterium ajmalii
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
புரோடியோபாக்டீரியா
வகுப்பு:
ஆல்பாபுரோடியோபாக்டீரியா
வரிசை:
ரைசோபையாலெசு
குடும்பம்:
மித்தைலோபாக்டீரியேசியே
பேரினம்:
மெத்திலோபாக்டீரியம்
இனம்:
மெ. அஜ்மாலி
இருசொற் பெயரீடு
மெத்திலோபாக்டீரியம் அஜ்மாலி
சுவாதி பிஜிலானி உள்ளிட்டோர். 2021[1]

மெத்திலோபாக்டீரியம் அஜ்மாலி (Methylobacterium ajmalii) என்பது பன்னாட்டு வான்வெளி மையத்தினால் அண்மையில் வான்வெளியில் பூமியினை இருமுறை சுற்றிவந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் காணப்பட்ட நான்கு வகையான புதிய பாக்டீரியாக்களில் ஒன்றாகும். மெத்திலோபாக்டீரிய பேரினத்தில் பல்வேறு வகையான இனங்கள் காணப்படுகின்றன.[2] மெ. அஜ்மாலி என்பது கிராம் எதிர், குச்சி வடிவ பாக்டீரியாவாகும். இந்த பாக்டீரிய உயிரணுக்கள் 1.6 முதல் 1.8 மைக்ரோ மீட்டர் அகலமும் 2.2 முதல் 3.2 மைக்ரோ மீட்டர் நீளமும் உடையது. காற்றுச்சூழலில் வாழக்கூடிய இந்த பாக்டீரியா மீதேன் அல்லது மெதனாலைக் கார்பன் மற்றும் சக்தி மூலமாகச் சர்க்கரை மற்றும் கரிம அமிலங்களுடன் பயன்படுத்துகின்றது.[3]. இந்தப் பாக்டீரியா தாவர வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றது. சர்வதேச விண்வெளி ஆய்வின் பகுதியாகப் புவியின் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு மூலக்கூறு ஆய்வு, மூலக்கூறு வகைப்பாட்டின் முடிவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியா ஒன்றிற்கு இந்தியாவின் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக, கடல்வாழ் உயிரியல் நிலையப் பேராசிரியர் பல்லுயிர் ஆய்வாளர் அஜ்மல்கானின் ஆராய்ச்சியினை பெருமைப்படுத்தும் விதமாக மெத்திலோபாக்டீரியம் அஜ்மாலி எனப்பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. https://www.frontiersin.org/articles/10.3389/fmicb.2021.639396/full
  2. Kelly, D. P., McDonald, I. R., and Wood, A. P. (2014). “The family methylobacteriaceae,” in The Prokaryotes- Alphaproteobacteria and Betaproteobacteria, eds E. Rosenberg, E. F. DeLong, S. Lory, E. Stackebrandt, and F. Thompson, (Berlin: Springer), 313–340. doi: 10.1007/978-3-642-30197-1_256
  3. Patt, T. E., Cole, G. C., and Hanson, R. S. (1976). Methylobacterium, a new genus of facultatively methylotrophic bacteria. Int. J. Syst. Bacteriol. 26, 226–229. doi: 10.1099/00207713-26-2-226