மெத்தில்வளையயெக்சனோன்
வேதிச் சேர்மங்களின் ஒரு வகை
மெத்தில்வளையயெக்சனோன் (Methylcyclohexanone) என்பது வளையயெக்சனோனின் வழிப்பெறுதியாகக் கருதப்படுகிறது. அறியப்பட்டுள்ள மூன்று சமபகுதியங்களில் எதையும் இச்சேர்மம் குறிக்கும். 2-மெத்தில்வளையயெக்சனோன், 3-மெத்தில்வளையயெக்சனோன், 4-மெத்தில்வளையயெக்சனோன் என்பவை அம்மூன்று சமபகுதியங்களாகும்.[1]
மெத்தில்வளையயெக்சேனை ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தி இவற்றை உற்பத்தி செய்யலாம். தொடர்புடைய கிரெசால் சேர்மத்தை பகுதியளவு ஐதரசனேற்றம் செய்தும் இவற்றை தயாரிக்கலாம். மூன்று சமபகுதியங்களும் நீர்மநிலையில் காணப்படுகின்றன. 2-மெத்தில்வளையயெக்சனோன், 3-மெத்தில்வளையயெக்சனோன் இரண்டு நாற்தொகுதி மையங்களைக் கொண்டுள்ளன.
சமபகுதியம் | பதிவு எண் | உருகுநிலை. (°செல்சியசு) | கொதிநிலை. (°செல்சியசு) | அடர்த்தி (கி/செ.மீ3) |
---|---|---|---|---|
2-மெத்தில்வளையயெக்சனோன் | 583-60-8 | −13.9 | 165.1 | 0.925 |
3-மெத்தில்வளையயெக்சனோன் | 591-24-2 | −73.5 | 170.0 | 0.920 |
4-மெத்தில்வளையயெக்சனோன் | 589-92-4 | −40.6 | 171.3 | 0.916 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Musser, Michael Tuttle (2000). "Cyclohexanol and Cyclohexanone". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a08_217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.