மென்னுண்ணிக் கொல்லி

மென்னுண்ணிக் கொல்லி (acaricide) ஒட்டுண்ணி அல்லது சிற்றுண்ணிகளை கொல்லும் விதமாக செயலாற்றுகின்ற வீரிய மருந்து அல்லது வேளாண்வேதிப் பொருளாகும். இவை உண்ணிகளின் உயிரணுக்களின் சுவாசத்தை தடுத்தோ, வளர்ச்சியைத் தடுத்தோ உயிரிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கியோ இவ்வாறு கொல்கின்றது. இவற்றின் தாக்கம் உண்ணிகளின் கருவிலோ, புழுப் படிவத்திலோ, வளர்ந்த நிலையிலோ இருக்கலாம். சில பெண் உண்ணிகளின் கருவுறுதலை தடுத்தும் எண்ணிக்கையை குறைக்கின்றன.

இவை மருத்துவத்திலும் வேளாண்மையிலும் பயன்படுத்தப்படுகின்றன.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்னுண்ணிக்_கொல்லி&oldid=1465965" இலிருந்து மீள்விக்கப்பட்டது