மெய்ஞ்ஞானப் புலம்பல்

மெய்ஞ்ஞானப் புலம்பல் என்பது பத்திரகிரியார் என்ற சித்தரால் 14 ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற பாடல்கள் ஆகும். இந்த நூல் 231 கண்ணிகளைக் கொண்டது. இந்த கண்ணிகள் ஊடாக பல மெய்யியல் கருத்துக்கள் கூறப்படுகின்றன.

பாடல் எடுத்துக் காட்டுக்கள்தொகு

 மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
 என தறிவைஅம்பாக்கி எய்வது இனி எக்காலம் ?         161

 வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
 ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம் ?              032

 அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்
 பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம் ?         192

 பிறப்பும் இறப்பும்அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று
 மறப்பும் நினைப்பும்அற்று மாண்டிருப்பது எக்காலம் ?       206

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்ஞ்ஞானப்_புலம்பல்&oldid=1140739" இருந்து மீள்விக்கப்பட்டது