மெய்நிகர் புலம்
மின்னணுவியலில், மெய்நிகர் புலம் (Virtual ground) என்பது ஒரு மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும். சில நேரங்களில், இந்த மேற்கோள் திறலானது புவியின் பரப்பாக குறிக்கப்படும், அப்பொழுது அதனை மெய்நிகர் புவி என்றும் அழைக்கப்பெறும்.
மெய்நிகர் புல கருத்துரு, செயற்பாட்டு மிகைப்பியில் (operational amplifier) சுற்றுப் பகுப்பாய்வு (circuit analysis) செய்யவும், நடைமுறை சுற்று விளைவுகளை அறியவும் பயன்படுகிறது.