மெய்ப்பிக்கும் சுமை

மெய்ப்பிக்கும் சுமை என்பது நீதிமுறை நிறுவனங்களில் ஒரு பொருண்மையை மெய்ப்பிக்கும் பொறுப்பினைக் குறிக்கிறது. இது ஒரு வழக்கு விசாரணையில் உள்ள இரண்டு தரப்பினரில் எந்தெந்தப் பொருண்மைகள் எவரெவரால் மெய்ப்பிக்கப்படவேண்டும் என்பதை வரையறுத்துக்கூறும் சட்டவியல் கோட்பாடாகும்.

இந்தியச் சாட்சியச் சட்டத்தில் மெய்ப்பிக்கும் சுமை

தொகு

இந்தியச் சாட்சியச் சட்டத்தில் பிரிவுகள் 101 முதல் 114A வரை மெய்ப்பிக்கும் சுமையைப் பற்றிய விதிகளை வகுத்துள்ளன. மெய்ப்பிக்கும் சுமையை ஒரு வழக்கு விசாரணையில் யார் மீது சட்டம் சுமத்தியுள்ளதோ அவரே அதனை மெய்ப்பித்தாகவேண்டும். இந்தச் சட்டக் கடப்பாடு விசாரணை தொடங்கும்போது ஒரு தரப்பினரிடம் இருக்கவும் விசாரணையின் அடுத்த கட்டத்தில் அவருக்கு எதிர்த்தரப்பினரிடம் இருக்கவும் கூடும். குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளின் விசாரணை நடவடிக்கைகளில் இந்த மெய்ப்பிக்கும் சுமையைச் சாட்சியச் சட்டம் வெவ்வேறு விதிமுறைகளைக் கொண்டு வகுத்துள்ளது.

மெய்ப்பிக்கும் சுமைக் கோட்பாட்டின் வரலாறு

தொகு

உரிமையியல் வழக்கில் மெய்ப்பிக்கும் சுமை

தொகு

உரிமையியல் வழக்கில் ஒரு பொருண்மையை நீதிமன்றம் உண்மையென ஏற்கவேண்டும் என்று எந்தத் தரப்பினர் விரும்புகின்றனரோ அவரே அப்பொருண்மையை மெய்ப்பிக்கும் கடப்பாட்டைக் கொண்டவர். சில சூழ்நிலைகளில் இது ஒரு தரப்பினரிடமிருந்து இன்னொரு தரப்பினருக்கு இடம்மாறலாம்.

குற்றவியல் வழக்கில் மெய்ப்பிக்கும் சுமை

தொகு

குற்றவியல் கோட்பாடுகளின்படி குற்றம்சாட்டுகின்ற தரப்பினரே குற்றச்சாட்டு குறித்த பொருண்மைகளை மெய்ப்பிக்கும் சுமையைக் கொண்டிருப்பர். குற்றம்சாட்டப்பட்டவர் தான் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்று மெய்ப்பிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. இந்த நெறிமுறைக்கு குறிப்பான தடைகளை சட்டத்தின் மூலம் ஏற்படுத்தினாலொழிய இதுவே பொதுவான நெறிமுறையாகும்.

மெய்ப்பிக்கும் சுமை இடம் மாறுதல்

தொகு

குறிப்பிட்ட ஒரு தரப்பினரிடம் இருக்கும் மெய்ப்பிக்கும் சுமை மற்றொரு தரப்பினரைச் சென்றடைதல் மெய்ப்பிக்கும் சுமை இடம் மாறுதல் என்று கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்ப்பிக்கும்_சுமை&oldid=3602501" இலிருந்து மீள்விக்கப்பட்டது