மெய்யியல் குறிப்பேடுகள்

லெனினின் மெய்யியல் குறிப்பேடுகள் (Philosophical Notebooks) என்பது மெய்யியல் நூல்களைப் பற்றிய சுருக்கங்களும் ஆய்வுரைகளும் அடங்கிய குறிப்பேடுகள் ஆகும். இந்நூல்களில் அரிசுட்டாட்டில், எகல், போயர்பாக், காரல் மார்க்சு, தெபோரின் ஆகியவர்களது பணிகள் அடங்கும். லெனினின் இணைமுரணியல் பற்றிய குறிப்புகள் எதிரிணைகளின் இணைவும் முரணும் பற்றிய உருசிய, சீன ஆய்வுகளில் பெரும்தாக்கத்தை விளைவித்துள்ளன. இக்குறிப்பேடுகள் அறிஞர்களால் அடிக்கடி அவரது பட்டறிவுத் திறனாய்வு நூலுடன் எதிர்வைத்துப் பார்க்கப்படுகிறன.

இக்குறிப்பேடுகளைப் பற்றிய சரியான விளக்கம் 1920களில் சோவியத் ஒன்றியத்தில் நிகழ்ந்த எந்திரத்தனமான விவாதம் குறித்த புரிதலுக்கும் சீனாவின் 1964இன் ஒன்று இரண்டாகப் பிரிதல் முரண்பாடு குறித்த புரிதலுக்கும் பெரும்பங்களிக்கும். இக்குறிப்பேடுகள் மெய்யியல் கருத்தினங்களை நுட்பமாக ஆய்கின்றன.

வெளி இணைப்புகள் தொகு