மெய்யீற்றுப் புணரியல் (நன்னூல்)
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து இயல்களில் நான்காவது இயல் மெய்யீற்றுப் புணரியல் ஆகும். இதில் மொத்தம் 36 நூற்பாக்கள் (204-239) உள்ளன.
கூறுகள்
தொகுஇவ்வியலில் கீழுள்ள தலைப்புகளில் புணர்ச்சிகளின் விதிமுறைகள் தரப்பட்டுள்ளன:
- மெய்யீற்றின் முன் உயிர் புணரும் புணர்ச்சி
- மெய்யீற்றின் முன் மெய் புணரும் புணர்ச்சி
- ணகர னகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி
- மகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி
- ய ர ழ வீற்றுச் சொற்களின் புணர்ச்சி
- லகர ளகர வீற்றுச் சொற்களின் புணர்ச்சி
- வகர வீற்றுச் சொற்களின் புணர்ச்சி
- வருமொழித் தகர நகரத் திரிபு
- வேற்றுமைப் பொருட் புணர்ச்சியை உருபு புணர்ச்சியோடு மாட்டெறிதல்
- புணரியல்களுக்குப் புறனடை