மெரியெட்டைட்டு

ஆலைடு கனிமம்

மெரியெட்டைட்டு (Mereheadite) என்பது Pb47Cl25(OH)13O24(CO3)(BO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரியவகை ஆக்சிகுளோரைடு கனிமம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் சோமர்செட்டு மாகானத்திலுள்ள கிரான்மோர் கிராமத்திலுள்ள மெரியெட்டு கல்குவாரியில் மெந்திப்பைட்டு கனிமத்துடன் சேர்ந்து இக்கனிமம் காணப்படுகிறது. மெரியெட்டைட்டு கனிமத்தின் பல மாதிரிகள் பெரும்பாலும் கால்சைட்டு, மெந்திப்பைட்டு அல்லது செருசைட்டு கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. இளமஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திலுள்ள சிமிசைட்டு கனிமத்துடன் சேர்ந்தும் மெரியெட்டைட்டு காணப்படுவதாக அறியப்படுகிறது. கால்சைட்டு அல்லது மெந்திப்பைட்டு கனிமத்தின் மேல் சிறிய கொப்புளங்களாக சிமிசைட்டு காணப்படுகிறது. குறிப்பாக மெரியெட்டைட்டு கனிமம் விளிம்புகளில் காணப்படுவதால் இதன்மீது இத்தகைய சிமிசைட்டு கொப்புளங்கள் காணப்படுவதில்லை.

மெரியெட்டைட்டு
Mereheadite
பொதுவானாவை
வகைஆலைடு
வேதி வாய்பாடுPb47Cl25(OH)13O24(CO3)(BO3)2
இனங்காணல்
நிறம்வெளிர் மஞ்சள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மோவின் அளவுகோல் வலிமை3 12
மிளிர்வுநொறுங்கும், செயற்கைப் பிசின் பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளியியல் பண்புகள்ஈரச்சு
ஒளிவிலகல் எண்nα = 2.190 nγ = 2.280
இரட்டை ஒளிவிலகல்δ = 0.090
மேற்கோள்கள்[1][2][3][4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரியெட்டைட்டு&oldid=2735798" இலிருந்து மீள்விக்கப்பட்டது