மெரீமே சாதிது

மெரீமே சாதிது (Merieme Chadid) (பிறப்பு: அக்தோபர் 11, 1969, காசாபிளாங்கா) ஒரு மொராக்கோ வானியலாளரும் அறிவியல் தேட்டரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் அண்டார்க்ட்இகாவில் உள்ல தோமே சார்லீயைச் சார்ந்தவர்.[1][2] இவர் 2006 இல் அண்டார்க்டிகாவின் நட்டநடுப் பகுதியில் பன்னாட்டு அறிவியல் திட்ட்த்துக்காக பெரிய வானியல் காணகத்தை நிறுவும் குழுவுக்குத் தலைமை தாங்கினார்.[3][4]

மெரீமே சாதிது
Merieme Chadid
பிறப்பு(1969-10-11)அக்டோபர் 11, 1969
தேசியம்பிரான்சியர், மொராக்கோவினர்
துறைவானியல் தேட்டம்
பணியிடங்கள்தோமே சார்லீ, அண்டார்க்டிகா
கல்வி கற்ற இடங்கள்முனைவர் பவுல் சபாழ்சியர் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவானியலாளரும் அறிவியல் தேட்டரும்
விருதுகள்உலகப் பொருளியல் பேரவையின் இளம் பூவுலகத் தலைவர் (2008). 2015 ஆம் ஆண்டின் அறிவியல் பெண். மாண்புமிகு மொராக்கோ அரசர் 2013 இல் அளித்தகுவிசாம் அலவோயுவைட் ஆணை அலுவலர். அண்டார்க்டிக் விக்கிக்குண்டு, அண்டார்க்டிக் ஆராய்ச்சி அறிவியல் குழு (SCAR) (2016). பிரெஞ்சு-சீன அறக்கட்டளை இளந்தலைவர் (2014).

வாழ்க்கைப்பணி

தொகு

இவர் தன் முனைவர் பட்டத்தை 1996 இல் தவுலவுசுவில் உள்ள பவுல் சபாத்தியேர் பல்கலைக்கழகத்தில் பெற்றார். துடிவிண்மீன்களின் மீயொலி அதிர்ச்சி அலைகளைக் கண்டுபிடித்து விளக்கியதற்காக இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. பிறகு இவர் மான்ட்பெலியரில் உள்ள தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் (Centre national de la recherche scientifique) சேர்ந்தார். இவர் 1998 முதல் 2001 வரையில் சிலியில் உள்ள மீப்பெரு தொலைநோக்கியை நிறுவினார். இவர் 2002 இல் தேசிய வானியல் மன்றத்தில் (Conseil national des Astronomes) சேர்ந்தார்.[3]

அண்டார்க்டிகாவின் நட்டநடுப் பகுதியில் அமைந்த டோம் சி எனும் ஒரு புதிய வான்காணகத்தில் தொலைநோக்கிகளை 2006 இல் நிறுவ ஒரு குழுவைத் தலைமை தாங்கிச் சென்றார். இவர் தான் அண்டார்க்டிகா சென்ற முதல் எண்மணியும் மொராக்கோவின் கொடியைப் புவியின் தென்முனையில் நட்டவரும் ஆவார்.[3][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Miller, Rebecca (2016-04-26). "Merieme Chadid". myhero.com (The My Hero Project). http://myhero.com/hero.asp?hero=Meryem_Chadid_09. 
  2. "Featured Fellow: Dr. Merieme Chadid, Renowned Astronomer and Explorer". africaprosperity.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). The Global Network for Africa’s Prosperity. Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.
  3. 3.0 3.1 3.2 Emmanuel Kwaku Akyeampong; Henry Louis Gates; Steven J. Niven (2 February 2012). Dictionary of African Biography. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 54–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-538207-5.
  4. "khmissa.org (p.8)" (PDF). Archived from the original (PDF) on 2007-03-05. (725 KiB)(பிரெஞ்சு)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Arab Woman of The Year 2015". moroccanembassylondon.org.uk. Embassy of The Kingdom of Morocco. Archived from the original on 2017-06-28. பார்க்கப்பட்ட நாள் 2016-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரீமே_சாதிது&oldid=3591289" இலிருந்து மீள்விக்கப்பட்டது