மெலன்கோம்மாஸ்

கிரேக்க வரலாற்று குத்துச் சண்டை வீரர்

மெலன்கோம்மாஸ் (Melankomas, Melancomas) கிரேக்க புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குத்து சண்டை வீரர் ஆவார்.[1] கேரியா என்ற இன்றைய துருக்கியில் பிறந்த இவர், 207வது புராண ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் கலந்து கொண்டார். டியோ க்ரிசொஸ்தம் (Dio Chrysostom) போன்ற கிரேக்க வரலாற்று நூல்களில் இவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.[2] டியோ இவருக்கான குத்துச்சண்டை நேர்த்தியையும், இவருடைய கட்டுடலையும் பாராட்டுவதாக குறிப்புகள் அந்த புத்தகத்தில் வருகின்றன.

இவருடைய சிறப்பு, தன்னுடைய எந்த எதிரியையும் இவர் ஒரு முறைகூட தாக்கியதில்லை. அதாவது தன்னை போட்டியில் எதிரி தாக்கும்பொழுது தன்னை தற்காத்து கொண்டே இருப்பார், தன் மேல் எதிரி தாக்காமல் பார்த்து கொண்டே இருப்பார், இவராக எதிரியையும் தாக்கமாடடார். இப்படியாக எதிரியையும் தாக்காமல், தானும் தாக்கப்படாமலும் பல போட்டிகளை வென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. 1ஆம் நூற்றாண்டில் ரோமை ஆண்ட, டைட்டசு எனும் மன்னர் இவரை விரும்பியதாகவும் தேமிஸ்டியஸின் குறிப்புகள் பதிகின்றன.

நிஜ வரலாற்று வீரனென்று சிலரும், அது டியோவின் கற்பனை கதாபாத்திரம் மட்டுமே என்றும், சில வரலாற்று ஆய்வாளர்கள் நினைக்கின்றனர். இதுதான் சரி என்று கணக்கிடும் வேறு தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை.

ஸ்போர்ட்ஸ் நைட் வெளியிட்ட கடந்த மில்லேனியத்தின் சிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் மெலன்கோம்மாஸ் பெயரும் இடம்பெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Dictionary Of History By Ramesh Chopra Page 192 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8205-223-8
  2. Melankomas is also mentioned in Themistius, Orationes 10 (=165 Dinsdorf) and alluded to by Eustathius.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலன்கோம்மாஸ்&oldid=2698318" இலிருந்து மீள்விக்கப்பட்டது