மெழுகுத்திருட்டு (விளையாட்டு)

மெழுகுத்திருட்டு என்பது கார்த்திகை அன்று தமிழகத்தின் தென்காசி நகரில் சிறுவர்களால் விளையாடப்படும் விளையாட்டாகும். கார்த்திகை இரவன்று அந்தந்த இடங்களிலுள்ள சிறுவர்கள் கூட்டணி அமைத்து வீட்டின் முன் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் மெழுகுவர்த்திகளை திருடி ஒரு ரகசிய இடத்தில் ஒளித்து வைத்து விடுவர். மறுநாள் காலை களிமண்ணில் தன்னீரை குழைத்து நன்று காயவைத்துவிட்டு அதில் வீட்டில் வத்திருக்கும் வெண்கல சிலைகளின் மூலம் அச்சுத்துவாரம் உருவாக்கி விடுவர். பின்பு திருடிய மெழுகுகளை உருக்கி அவ்வச்சுத்துவாரத்தில் ஊற்றிவிட்டு சிறிது நேரம் களித்து அம்மெழுகு சிலை போல வெளிவந்துவிடும்.

கருவிகள்

தொகு
  • வடிவியல் தகரப்பெட்டி - உருக்குலைக்கு பதிலாக.
  • களிமண் - வார்ப்பு மணலுக்கு பதிலாக.
  • சமையல் இடுக்கி - உருக்குலையை பிடிப்பதற்கு.