மெழுகு சுரப்புக் குழல்

மெழுகு சுரப்புக் குழல் (Cornicle) அல்லது உறுஞ்சுகுழல் என்பது செடிப்பேன் பூச்சிகளில் 5 அல்லது 6வது வயிற்றுப் பகுதிக் கண்டங்களின் முதுகுப் பக்கத்தில் காணப்படும் ஒரு இணை சிறிய நிமிர்ந்த பின்னோக்கி-சுட்டிய சுரப்புக் குழாயாகும். இவை சில சமயங்களில் மலவாய்க் கொம்பு என்று தவறாகக் கருதப்படுகின்றன. இவை சில சிற்றினங்களில் துளைகளுடன் மட்டுமே காணப்படும்.

அசுவினி பூச்சி மெழுகு சுரப்புக் குழல் வழிகாக தற்காப்பு திரவத்தை வெளியேற்றுகிறது
மெழுகு சுரப்புக் குழல்

இந்த வயிற்றுக் குழாய்கள் கார்னிகல் மெழுகு எனப்படும் டிரையகிளிசரைடுகளைக் கொண்ட விரைவான-கடினப்படுத்தும் தற்காப்பு திரவத்தினை நீர்த்துளிகளாக வெளியேற்றுகின்றன. மெழுகு சுரப்புக் குழல்களின் செயல்பாடு பற்றி ஆய்விதழ்களில் காணப்படும் கட்டுரைகளில் சில குழப்பங்கள் உள்ளன. ஒரு காலத்தில் மெழுகு சுரப்புக் குழல்கள் தேன்பனியின் ஆதாரம் என்று கூறுவது பொதுவானது. மேலும் இது ஷார்ட்டர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி[1] மற்றும் உலக புத்தக கலைக்களஞ்சியத்தின் 2008 பதிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் இந்த மெழுகு கொன்றுண்ணிகளை ஈர்க்கின்றன என்பதற்காகச் சான்றுகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளும் உள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Edwards, John S. (1966). "Defence by Smear: Supercooling in the Cornicle Wax of Aphids". Nature 211 (5044): 73–74. doi:10.1038/211073a0. Bibcode: 1966Natur.211...73E. 
  2. Grasswitz, Tessa R.; Paine, Timothy D. (1992). "Kairomonal effect of an aphid cornicle secretion on Lysiphlebus testaceipes (Cresson) (Hymenoptera: Aphidiidae)". Journal of Insect Behavior 5 (4): 447–457. doi:10.1007/BF01058190. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெழுகு_சுரப்புக்_குழல்&oldid=3664003" இலிருந்து மீள்விக்கப்பட்டது