மேகம் பாராட்டும் கழகம்

மேகம் பாராட்டும் கழகம் (Cloud Appreciation Society) என்பது ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த கவின் எட்மண்டு பிரீட்டர் பின்னெய் என்பவரால் 2005 சனவரியில் துவக்கப்பட்ட ஒரு கழகமாகும். மேகத்தைப் புரிந்துகொள்வதும், அதைப் பாராட்டி ஊக்குவிப்பதும் இக்கழகத்தின் நோக்கங்களாகும். நவம்பர் 2019 நிலவரத்தின்படி , உலகம் முழுவதும் 120 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 49000 உறுப்பினர்கள் இக்கழகத்தில் இருந்தார்கள்.

2005 ஆம் ஆண்டில் இணையம் கண்டுபிடித்த அதிவினோத அதியற்புதம் - என்று இக்கழகத்தின் இணையதளத்தை யாகூ பெயரிட்டு வியந்தது. இந்தக்கழகத்தின் நிறுவனரும் உறுப்பினர் குழுவும் ”மேகத்தைக் கண்டு கொள்ளல்” என்ற ஆவணப்படத்தின் மையமாகத் திகழ்ந்தனர். ஊடக நிறுவனம் பிபிசி, பிரீட்டர் பின்னெய்யின் ,மேகத்தைக் கண்டு கொள்பவர்கள் கையேடு என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படத்தை தயாரித்திருந்தது[1].

மேற்கோள்கள் தொகு

  1. "Cloudspotting". BBC Four. British Broadcasting Corporation. பார்க்கப்பட்ட நாள் 2009-05-04.

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகம்_பாராட்டும்_கழகம்&oldid=2900367" இலிருந்து மீள்விக்கப்பட்டது