மேனகை என்பவர் தேவ லோகத்தில் வாழ்கின்ற அரம்பையர்களில் ஒருத்தியாவர். இவர் விஸ்வாமித்தரரது மனைவியும், சகுந்தலையின் அன்னையுமாவார்.[1][2][3]

விசுவாமித்திரர்-மேனகை ரவி வர்மா ஓவியம்

விஸ்வாமித்திரர் தவம்

தொகு

விஸ்வாமித்தர முனிவர் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தின் கனல் தேவ லோகத்தில் இருக்கும் இந்திரனுக்கு அச்சத்தினை உண்டாக்கியது. எனவே தேவ கன்னிகையான மேனகையை விஸ்வாமித்தரர் முன் நடனமாடச் செய்து, முனிவரின் தவத்தினை களைக்க கட்டளையிட்டான். அவ்வாறே மேனகை விஸ்வாமித்திரர் முன் நடனமாடினாள்.

அவளுடைய நடனத்தினால் முனிவரின் தவம் களைந்தது. அத்துடன் மேனகையை மனைவியாக ஆக்கிக்கொண்டார் விஸ்வாமித்திரர். இவர்கள் இருவருக்கும் சகுந்தலை என்ற மகள் பிறந்தாள்.

கருவி

தொகு

மகாபாரதம் - விஸ்வாமித்ரரும் மேனகையும் | ஆதிபர்வம் - பகுதி 72

காண்க

தொகு

ஆதாரம்

தொகு
  1. PC Roy Mahabharata link: http://www.holybooks.com/mahabharata-all-volumes-in-12-pdf-files/
  2. www.wisdomlib.org (2012-06-16). "Menaka, Menakā, Menake: 19 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-02.
  3. Devdutt Pattanaik (2000). The Goddess in India: The Five Faces of the Eternal Feminine. Inner Traditions / Bear & Co. p. 67.

வெளி இணைப்பு

தொகு

மஹாபாரதத்தில் மேனகை

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேனகை&oldid=4102361" இலிருந்து மீள்விக்கப்பட்டது