மேயாறு நீர் மின் திட்டம்

தமிழகத்தில் உள்ள ஒரு நீர்மின்நீலையம்

மேயாறு நீர் நிலையம் (Moyar Power House) என்பது தமிழ்நாட்டின் நீலகிரியில் அமைக்கப்பட்டுள்ள  நீர் மின் ஆற்றல் மின் நிலையம் ஆகும். இது  தமிழ்நாடு மின்வாரியத்தால் இயக்கப்படுகிறது. இந்த மின்நிலையம் உதகமண்டலத்தில் இருந்து 48 கி.மீ  தொலைவிலும், கூடலூரில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும், மேயாறு பள்ளத்தாக்கின் அடியில் அமைந்துள்ளது.  மேலும் இந்த மின்நிலையத்தை அணுக மேலே பீடபூமியில் இருந்து ஒரு இழுவைப் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.[1][2]

நீர் மின் நிலைய வரைபடம்

விவரங்கள்தொகு

இந்த மின் நிலையம் மொத்தம் 36 மெகாவாட் திறன் கொண்டதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் மூன்று அலகுகள் உள்ளன ஒவ்வொரு அலகும் 12 மெகாவாட் திறனுடையவை. மின் நிலையத்திற்கு 609 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்த நிலையத்திற்கான தண்ணீர் மேயாறு ஃபோரிபே அணை மற்றும் மரவக்கண்டி அணை ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்தொகு

  1. "moyar power house". nilgiris.tn.gov.in. மூல முகவரியிலிருந்து 2011-09-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-09-13.
  2. "Nilgiris - General Information". southindianstates.com. மூல முகவரியிலிருந்து 2012-04-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-09-13.
  3. "moyar". tneb.in. மூல முகவரியிலிருந்து 2011-08-03 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-09-13.
  4. "hydro-electric system". greenosai.org. மூல முகவரியிலிருந்து 2011-09-03 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-09-13.