மேயெர்சு தொகுப்பு முறை

மேயெர்சு தொகுப்புமுறை ('Meyers synthesis) என்பது ஒரு ஆக்சசீனின் நீராற்பகுப்பு வழியாக ஒரு சீர்மையற்ற ஆல்டிகைடைத் தயாரிக்க உதவும் கரிமத் தொகுப்பு முறை ஆகும்.[1][2][3][4] இநத வினையானது அமெரிக்க வேதியியலாளர் ஆல்பர் மேயெர் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

Meyers synthesis

இந்த வினையின் தொடக்க வினைபடுபொருள் 2ஆம் இடத்தில் அல்கைல் தொகுதியைக் கொண்ட ஒரு டைஐதரோ -1,3-ஆக்சசீன் ஆகும். ஆல்பா இடததில் உள்ள நேர்மின்னியானது அமிலத்தன்மை உடையதாக இருப்பதால் பியூட்டைல் இலித்தியம் போன்ற ஒரு காரத்தன்மை கொண்ட பொருளால் கவரப்படலாம். மேலும், தொடர்ச்சியாக அல்கைல் ஆலைடினால் அல்கைலேற்றம் செய்யப்படலாம். அடுத்த படிநிலையில் நைடரசனுக்கும் கார்பனுக்கும் இடையிலான இரட்டைப்பிணைப்பானது சோடியம் போரோஐதரைடினால் கரிம ஒடுக்கத்திற்கு உட்பட்டு அதன் காரணமாக கிடைக்கப்பெறும் ஆக்சசீனானது நீர் மற்றும் ஆக்சாலிக் அமிலத்தால் நீராற்பகுக்கப்பட்டு ஆல்டிகைடைத் தருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Aldehydes from dihydro-1,3-oxazines. I. Synthesis of aliphatic aldehydes and their C-1 deuterated derivatives Albert I. Meyers, Aiko Nabeya, H. Wayne Adickes, Ieva R. Politzer J. Am. Chem. Soc. 1969; 91(3); 763-764. எஆசு:10.1021/ja01031a053
  2. Aldehydes from dihydro-1,3-oxazines. II. Synthesis of .alpha.,.beta.-unsaturated aldehydes and their C-1 deuterated derivatives Albert I. Meyers, Aiko Nabeya, H. Wayne Adickes, J. Michael Fitzpatrick, G. Ray Malone, and Ieva R. Politzer pp 764 - 765; J. Am. Chem. Soc. 1969 எஆசு:10.1021/ja01031a054
  3. Aldehydes from dihydro-1,3-oxazines. III. Synthesis of cycloalkanecarboxaldehydes Albert I. Meyers, H. Wayne Adickes, Ieva R. Politzer, and Warren N. Beverung pp 765 - 767; J. Am. Chem. Soc. 1969 எஆசு:10.1021/ja01031a055
  4. Organic Syntheses, Coll. Vol. 6, p.905 (1988); Vol. 51, p.24 (1971). http://www.orgsynth.org/orgsyn/pdfs/CV6P0905.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேயெர்சு_தொகுப்பு_முறை&oldid=2799630" இலிருந்து மீள்விக்கப்பட்டது