மேரி அடேலா பிளெகு

மேரி அடேலா பிளேக் (Mary Adela Blagg, மே 17, 1858 – ஏப்பிரல் 14, 1944) ஒரு ஆங்கிலேய வானியலாளர்.

இவர் சுட்டாஃபோர்டுசயரில் உள்ள சீடில் எனும் இடத்தில் பிறந்துள்ளார். தன் வழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்துள்ளார். மேரி ஜான் சார்ள்சு பிளேகுக்கும் ஃபிரான்சு கரோலின் ஃபூட்டிட்டுக்கும் மகளாகப் பிறந்துள்ளார். இவர் தனது தாயின் நூல்களைப் படித்துக் கணிதவியற் பயிற்சி பெற்றுள்ளார். இவர் 1875இல் கென்சிங்டனில் பள்ளியில் சேர்ந்து அங்கு இயற்கணிதமும் செருமன் மொழியும் பயின்றுள்ளார். பிறகு இவர் ஞாயிறு பள்ளி ஆசிரியராக வேலை செய்துள்ளார். மேலும் இளம்பெண்கள் நட்புக் கழகத்தில் கிளைச் செயலாளராக இருந்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவாக்கத் திட்ட்த்தின்கீழ் ஜே.ஏ. ஃஆர்டுகேசிலிடம் பயின்றதும் தன் நடு அகவையில் வானியலில் ஆர்வம் கவியப் பெற்றுள்ளார். பின்னவர் ஜான் எர்செலின் பெயரன் ஆவார்.[1] இவரது பயிற்றுநர் அறிவுரையின்பேரில் நிலாப்பரப்பியலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார். குறிப்பாக, கோள்களின் சீரான பெயெரீடு குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். (அப்போது இருந்த நிலாவரைவுகளில் காட்டப்படும் அதன் கூறுபாடுகளின் பெயர்களில் ஏராளமான குழறுபடிகள் நிலவின.)

புதியதாக உருவாகிய பன்னாட்டுக் கல்விப்புலங்களின் கழகம் இவரிடம் 1905இல் நிலாவின் கூறுபாடுகள் குறித்த சீர்மிகு பட்டியலை உருவாக்கும் பணியை நல்கியது. இந்த அரியதும் நெடியதுமான பணியை இவர் எசு. ஏ. சாந்தருடன் இணைந்து மேற்கொண்டார். இம்முடிவுகள் 1913இல் வெளியிடப்பாட்டன. இதில் கழகத்தால் தீர்வு காணவேண்டிய நீண்ட குழறுபடிகளின் பட்டியலைத் தந்துள்ளார். மேலும் மாறியல்பு விண்மீன்களைக் குறித்தும் பேரா. எச். எச். டர்னருடன் இணைந்து இவர் கணிசமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.இவை மாதவரி அறிக்கைகள் இதழில் தொடர்கட்டுரைகளாக வெளியாகின. இப்பணியில் பெரும்பாலான ஆய்வை மேரி பிளேகுதான் செய்தார் எனப் பேராசிரியரே மனந்திறந்து ஒப்புக்கொண்டுள்ளார்.

[[அரசு வானியல் கழகத்துக்குப் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டதும், 1916 இல் இவர் ஆய்வு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்போது ஒருங்கே தேர்வாகிய ஐவருள் இவரும் ஒருவராவார். அக்கழகத்தின் முதல் பெண் உறுப்பினர் இவரே.

இவர் போடு விதிக்கான ஃபூரியர் பகுப்பாய்வை மேற்கொண்டார். இது மைக்கேல் மார்ட்டின் நியட்டோவின் "கோள்தொலைவுகளுக்கான டிழ்சியசு-போடு விதி" எனும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாகிய பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் நிலாக்குழுமத்தில் 1920இல் இணைந்தார். அவருக்கு நிலாப்பெயரீட்டுமுறையைத் தரப்படுத்தும் பணி தரப்பட்டது.இப்பணியை வானியலாளர் கார்ள் முல்லருடன் இணைந்து செய்தார். கார்ள் முலர் ஓர் ஓய்வுபெற்ற அரசு பணியாளரும் பயில்நிலை வானியளாளரும் ஆவார்.[2] இருவரும் இணைந்து 1935இல் நிலா பரப்புருவங்களின் பெயர்கள் என்ற தலைப்பில் இருதொகுதிகளை வெளியிட்டனர். இது பிறகு இதற்காக அனைவரும் பின்பற்றும் தரமான பார்வைநூலாக அமைந்தது.

வாழ்நாள் முழுவதும் தன்னார்வப் பணிகளில் பங்கேற்றுள்ளார். முதல் உலகப் போரின்போது பெல்ஜிய அகதிக் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டுள்ளார். அவரது ஆர்வம் சதுரங்க விளையாட்டத்தில் கவிந்திருந்த்து. அவரது நினைவு இருப்பிடத்தில் பணிவும் அடக்கமும் நிரம்பிய ஏன், ஒரு துறவி போன்றவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் எந்தக் கூட்டங்களுக்குமே போனதில்லையாம்.

நிலாவில் உள்ள ஒரு குழிப்பள்ளம் இவரது நினைவாக பிளேகுக் குழிப்பள்ளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நூல்தொகை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hockey, Thomas (2009). வானியலாளர்களின் வாழ்க்கைக் களஞ்சியம். Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
  2. Whitaker, Ewen A. (1999). Mapping and Naming the Moon: A History of Lunar Cartography and Nomenclature. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-54414-9.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_அடேலா_பிளெகு&oldid=4025224" இலிருந்து மீள்விக்கப்பட்டது